Samsung மின்னியல் நிறுவனம் அதன் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை 30 விழுக்காடு வரை குறைக்கவிருக்கிறது.
விற்பனை, விளம்பரம் ஆகிய பிரிவுகளில் 15 விழுக்காட்டினரும் நிர்வாகப் பிரிவில் 15 விழுக்காட்டினரும் இவ்வாண்டு இறுதிக்குள் வேலையை இழக்கக்கூடும்.
Samsung நிறுவனத்தின் இந்தியக் கிளையில் பாதிக்கப்பட்ட சில ஊழியர்களுக்கு ஏற்கனவே இழப்பீட்டுத் தொகுப்புத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பங்குச்சந்தையில் நிறுவனம் ஆக மோசமான சரிவைக் கண்டுள்ளது.
இந்தியாவில் செயல்படும் கிளையில் மட்டுமே சுமார் 20 விழுக்காட்டினர் ஆட்குறைப்புச் செய்யப்படுகின்றனர்.
இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கூடுதல் ஊதியம், சிறப்பான வேலையிட நிலைமை ஆகியவற்றுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனால் Samsung நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு கடும் இடையூறுகளைச் சந்தித்துள்ளது.
அண்மைக் காலமாகவே உயர்தரத் திறன்பேசி விற்பனையில் Apple, சீனாவின் Huawei ஆகிய நிறுவனங்களிடமிருந்து Samsung கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments