வேண்டாம்..ஹிஸ்புல்லாவிடம் மோதினால் நாம் தோற்போம்! இஸ்ரேலை எச்சரித்த "மொசாத்" மாஸ்டர்மைண்ட்! ட்விஸ்ட்

வேண்டாம்..ஹிஸ்புல்லாவிடம் மோதினால் நாம் தோற்போம்! இஸ்ரேலை எச்சரித்த "மொசாத்" மாஸ்டர்மைண்ட்! ட்விஸ்ட்

ஜெருசலேம்: லெபனான் நாட்டில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலோ.. ஹிஸ்புல்லா அமைப்பை இதற்கு மேல் தாக்கினாலோ.. இஸ்ரேல் நாடு அந்த போரில் தோல்வி அடைந்துவிடும் என்று முன்னாள் இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு அமைச்சரான மோசே யாலான் தெரிவித்துள்ளார். மொசாத் உளவு அமைப்பின் டாப் முன்னாள் தலைவர்களில் ஒருவராக இவர் பார்க்கபடுகிறார்.

அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில்.. இஸ்ரேல் நாடு ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்கொள்ள முடியும். அதற்கு வேறு வழிகளை பயன்படுத்த வேண்டும். நேருக்கு நேர் போர் சரிப்பட்டு வராது. நேருக்கு நேர் போர் புரியும் பட்சத்தில்.. அது நமக்கே எதிராக மாறும். இஸ்ரேல் நாடு அந்த போரில் தோல்வி அடைந்துவிடும் இஸ்ரேலிடம் அதற்கான பலமோ.. சாதகமான சூழலோ இல்லை என்று மோசே யாலான் தெரிவித்துள்ளார்.

பின்னடைவு: இஸ்ரேல் - ஈரான் - லெபனான் போர் விவகாரம் உச்சம் அடைந்து உள்ளது. இதில் இஸ்ரேல் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கைகள் நடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

லெபனானுக்கு நுழைய முயன்ற இஸ்ரேலின் Egoz சிறப்புப் படைப் பிரிவு பின்வாங்கி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் லெபனான் உள்ளே ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்று உள்ளது இஸ்ரேலின் எலைட் படிப்பிரிவான Egoz சிறப்புப் படைப் பிரிவு. 

அவர்களை தடுக்கும் விதமாக லெபனான் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர். 

தரைவழி தாக்குதல் எல்லாம் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா ஸ்டைல். அதை இஸ்ரேல் செய்ய முயன்று அடிவாங்கி உள்ளது. ஹிஸ்புல்லாவுடன் நடந்த சண்டையில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதம் இருந்த வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து ஓடி உள்ளனர்.

இஸ்ரேல் வீரர்களை துப்பாக்கியால் தாக்கியும், கையால் அடித்தும், கையெறி குண்டுகளை வீசியும் ஹிஸ்புல்லா படை வீரர்கள் கொன்றுள்ளனர். இதனால் பயந்த இஸ்ரேல் வீரர்கள் வேறு வழியின்றி லெபனானில் இருந்து வெளியேறி உள்ளனர். லெபனானில் இருக்கும் தெற்கு எல்லை பகுதியை ஊடுருவ முயன்று இஸ்ரேல் தோற்று ஓடி உள்ளது. வடகிழக்கு எல்லைக் கிராமமான அடேஸ்ஸேவிற்குள் நுழைய முயன்ற இஸ்ரேலிய வீரர்களை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானைத் தாக்குவது இதுவே முதல்முறை. சமீபத்தில்தான் இஸ்ரேலிய ராணுவம் F-35 போர் விமானங்களை வைத்து அங்கே தாக்குதல் நடத்தியது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது.' கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தளபதி இஸ்ரேல் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில் அங்கே தரைவழி தாக்குதலை செய்ய முயன்று இஸ்ரேல் தோற்று உள்ளது.

பதிலடி தாக்குதல் - கைகள் நடுஙகும்: 

இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கைகள் நடுங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் , லெபனான் உள்ளே தாக்குதல் நடத்துவது பற்றி நெதன்யாகு நேற்று பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போதுதான் அவரின் கைகள் நடுங்கியது.

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவரின் கைகள் நடுங்குவது போல அவரின் கைகள் இங்கும் அங்கும் மாறி மாறி நடுங்கியது. அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பு எதுவும் இருக்கிறதா அல்லது மன ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர் முற்ற தொடங்கி உள்ளது. இதில் ஈரானுக்கு சாதகமாக இருக்கும் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் மீது தாக்குதல் நடத்திய பின்பே ஈரான் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று இஸ்ரேலை தாக்கியது குறிப்பிடத்தக்கது. ஈரான் நேற்று முதல்நாள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இப்படிப்பட்ட நிலையில், லெபனானுக்கு நுழைய முயன்ற இஸ்ரேலின் Egoz சிறப்புப் படைப் பிரிவு பின்வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

oneindia



 



Post a Comment

Previous Post Next Post