Ticker

6/recent/ticker-posts

ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் இலங்கையிலும் பரவியது!

நாட்டில் முதன் முறையாகப் பன்றிகளிடையே பதிவான ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் காரணமாகப் பன்றி இறைச்சியைக் கொண்டு செல்வதற்கு முன்னர் பிரதேச பொதுச் சுகாதார அதிகாரியின் அனுமதி கட்டாயம் எனக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் பன்றிகளிடையே பதிவான ஒரு வகையான நோய் நிலைமை ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் (27) கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்திருந்தது.

கடந்த காலங்களில் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென பன்றிகள் மரணிக்கும் சம்பவங்கள் பதிவாகியிருந்தன

இது தொடர்பில், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்தது.

அதன்படி, முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் காரணமாக பன்றிகள் திடீரென மரணித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய பகுதிகளுக்குக் குறித்த நோய் நிலைமை பரவுவதைத் தடுக்கும் வகையில், பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளுக்குப் பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சியைக் கொண்டு செல்ல வேண்டுமாயின் பிரதேச பொதுச் சுகாதார அதிகாரியின் அனுமதியைப் பெறுவது கட்டாயம் எனக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பன்றிப் பண்ணைகளில் பன்றிகளுக்கு, ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்படுமாயின் அந்த பண்ணைகளை உடனடியாக முத்திரையிட நீதிமன்றத்தின் உத்தரவை பெறுமாறும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உரிய அதிகாரிகளுக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.



 Ai SONGS

 



Post a Comment

0 Comments