கருங்குறுவை: கருங்குறுவை நெல் குறுவைப் பட்டத்தில் பயிரிடுவது சிறந்தது.. உளவியல் தன்மைகளைப் பார்த்தோமானால், கருங்குறுவை சாயக்கூடியது. இந்தப் பயிரின் கால அளவு 125 நாட்களாகும். இதன் சராசரி உயரம் 105 செ.மீ. அதிகபட்சம் 101 செ.மீ வரை வளரும்..இந்த நெல்மணியின் இயல்புகளைப் பொருத்தவரையில். ஆயிரம் நெல்மணிகளின் எடை 25.48 கிராம் ஆகும். கருப்பு நிறமுடையது மற்றும் அடர் பழுப்பு நிறம் உடைய இது மோட்டா அரிசி என்று கூறப்படுகிறது. மகசூலைப் பொறுத்தவரையில் உதாரணமாக ஒரு ஏக்கருக்கு 825 கிலோ நெல் மற்றும் 1300 கிலோ வைக்கோல் கிடைக்கும்.
நன்மைகள்: கருங்குறுவை அரிசியில் சாம்பல் மற்றும் புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது. அதாவது தசை சிதைவு, சோர்வு, எடை இழப்பு, பலவீனம், எடிமா, இரத்த சோகை மற்றும் காயம் தாமதமாக ஆறுதல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த அரிசி அருமருந்து.
அதோடு மட்டுமா, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், மற்றும் உடற்பயிற்சி நிலையம் செல்பவர்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இந்த அரிசி சிறந்தது. முக்கியமாக இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளராமல் தடுக்க உதவுகிறது. இந்த அரிசியைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கருங்குருவை அரிசியை உண்ணும் போது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் தேவையற்ற நச்சுகளை உடனடியாக போக்குகிறது. அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த அரிசி ஒரு அருமருந்து. இந்த அரிசியைத் தொடர்ந்து உண்டு வந்தால் அவர்கள் உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது.தசைப்பிடிப்ப, மூட்டு பலவீனம்,முக்கியமாக பக்கவாதம்,குறைந்த இரத்த அழுத்தம், சேர்வு, மலச்சிக்கல், இதய பிரச்சனைகள், பார்வை தொடர்பான பிரச்சினைகள்,முடி உதிர்தல், பாலியல் செயலிழப்பு, போன்ற பொட்டாசியம், துத்தநாகத்தால் ஏற்படும் இப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும், அதன் சத்தை மேம்படுத்தி சமநிலையில் வைப்பதற்காகவும்,கருங்குறுவை அரசி உதவுகிறது.
முக்கியமாக அதிக அளவில் இரும்பு, பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துகளும், நிறைந்துள்ளது.இரத்த சோகை அதிகப்படியான மாதவிடாய் இரத்த இழப்பு, தசை மற்றும் எலும்பு பிரச்சனைகள், ஆகியவற்றை தீர்ப்பதோடு இவை அனைத்தையுமே மேம்படுத்தி உடல் நலனை காக்கும் உன்னதமான ஒரு நெல் ரகமாக இருக்கிறது.
கருங்குறுவை நெல்,வறண்ட மற்றும் வெள்ள அபாயத்திலும் தாங்கி நிற்கும். முக்கியமாக நோய்களைத் தாக்கக்கூடிய சக்தி இந்த ரகத்திற்கு இயல்பாகவே இருக்கிறது. இந்த அரிசியில் இட்லி, தோசை, பணியாரம், இனிப்பு வகைகள், புட்டு மற்றும் பலகார வகைகளையும் செய்யலாம்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments