Ticker

6/recent/ticker-posts

103 ரன்ஸ்.. வெ.இ அணியை அசால்ட்டாக நொறுக்கிய பிலிப் சால்ட்.. 21 வயது இங்கிலாந்து வீரர் அபார சாதனை

வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது. அந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டி நவம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு பார்படாஸ் நகரில் நடைபெற்றது. 

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி 182-9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 38, ஆண்ட்ரே ரசல் 30, செபார்ட் 35*, மோட்டி 33 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சாகிப் முகமது 4, அடில் ரசித் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பின்னர் 183 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடினார். அவருடன் 73 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த வில் ஜேக்ஸ் 17 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த இளம் வீரர் ஜேக்கப் பேத்தல் தம்முடைய பங்கிற்கு வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். 

அவருடன் சேர்ந்து மறுபுறம் எடுத்து வாங்கிய பிலிப் சால்ட் அரை சதமடித்து ரன்கள் குவித்தார். நேரம் செல்ல செல்ல அவுட்டாகாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியை நொறுக்கிய அவர் 9 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்து 103* (54) ரன்களை 190.74 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். அதே போல ஜேக்கப் பேத்தல் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 58* (36) ரன்கள் விளாசினார்.

அதனால் 16.5 ஓவரிலேயே 183-2 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதன் காரணமாக ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க துவங்கியுள்ள அந்த அணி 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் ஜேக்கப் பேத்தல் 21 வருடம் 17 வயதில் அரை சதம் அடித்தார்.

அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக இளம் வயதில் அரை சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அதே போல இங்கிலாந்து அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக சதமடித்த (3) விக்கெட் கீப்பர் என்ற ஜோஸ் பட்லர் சாதனையை உடைத்து பிலிப் சால்ட் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் ஜோஸ் பட்லர் 2 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments