அதைத் தொடர்ந்தது களமிறங்கிய நியூசிலாந்து மீண்டும் தடுமாற்றமாக பேட்டிங் செய்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.3 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வில் எங் 30, கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 19, ஜோஷ் கிளார்க்சன் 24 ரன்கள் எடுத்தார்கள். இலங்கைக்கு அதிகபட்சமாக ஹஸரங்கா 4, பதிரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்
பின்னர் 109 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் குஷால் மெண்டிஸ் 2, குசால் பெரேரா 3, கமிண்டு மெண்டிஸ் 1, கேப்டன் அசலங்கா 0 ரங்களில் அவுட்டாக்கிய லாக்கி பெர்குசன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். அதேபோல லோயர் மிடில் ஆடரில் ராஜபக்சா 15, ஹசரங்கா 3, வெல்லலாகே 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
ஆனாலும் எதிர்புறம் நிசாங்கா தொடர்ந்து நிதானமாக விளையாடி நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்தார். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அவர் அரை சதமடித்து இலங்கையை வெற்றி பாதைக்கு வந்தார். அதனால் கடைசி ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது அவரை 52 (51) ரன்களில் அவுட்டாக்கிய கிளன் பிலிப்ஸ் அடுத்து வந்த பதிரனாவை டக் அவுட்டாக்கினார்.
அதோடு நிற்காத அவர் மறுபுறம் போராடிய தீக்சனாவையும் 14 ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் 19.5 ஓவரில் இலங்கையை 103 ரன்களுக்கு சுருட்டிய நியூசிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. உண்மையில் நிசாங்கா ஆட்டத்தால் இப்போட்டியில் நியூசிலாந்தின் தோல்வி உறுதியானது. ஆனால் கடைசி ஓவரில் கிளன் பிலிப்ஸ் மேஜிக் போல பந்து வீசி இலங்கையின் வெற்றியை பறித்தார்.
நியூஸிலாந்துக்கு அதிகபட்சமாக பிலிப்ஸ் 3, லாக்கி பெர்குசன் 3, மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதனால் 1 – 1 (2) என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்த நியூஸிலாந்து அணி இலங்கையை சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல விடாமல் பதிலடி கொடுத்து பகிர்ந்து கொண்டது.
அத்துடன் சர்வதேச டி20 போட்டியில் தங்களுடைய குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி நியூசிலாந்து சாதனை படைத்தது. மறுபுறம் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் 3 போட்டிகளிலும் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டது போலவே இப்போட்டியில் இலங்கை தோற்றது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments