அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாகும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார் கமலா ஹாரிஸ். வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலிருந்த அவரது தோல்விக்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்திய வம்சவளி தாய்க்கும், ஆபிரிக்க வம்சாவளி தந்தைக்கும் பிறந்த இந்திய வம்சாவளி ஆபிரிக்க அமெரிக்கர் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் First Ladyயாக வரவேண்டுமென்று விரும்பியது ஏதோ உண்மைதான்.
'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற பெரும்பான்மைவாத வெள்ளையாதிக்க மனநிலை கமாலாவைத் தோல்வியுறச் செய்துவிட்டது.
ஆணாதிக்கம் மிகுந்து காணப்படும் அமெரிக்க வரலாற்றிலேயே ஒருபோதும் பெண் ஜனாதிபதியானது கிடையாது. 2016 அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் கூடத் தோல்விதான் அடைந்தார். தற்போதும் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட கமலாவும் தோல்வியைத்தான் அடைந்துள்ளார்.
பெண்கள் உரிமை, கருக்கலைப்பு உரிமை, குடியேற்றம், வரிகள் குறைப்பு என கமலாவின் பரப்புரையில் தாக்கத்தை ஏற்படுத்தியபோதிலும் , தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவராக, நாட்டின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இருக்கும் அவரால் நாட்டின் முதல் பெண்மணி என்ற உச்ச அதிகாரத்தை பெற முடியாமல் போய்விட்டமை வருந்தத்தக்கது ஒரு விடயமாகும்.
அவரை இந்திய வம்சாவளி என்று பிறர் அழைத்தபோதிலும், ஆரம்பத்திலிருந்தே தான் ஓர் இந்தியர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதை அவர் விரும்பவில்லை; குறிப்பாக அவர் தன்னை ஒரு தமிழ்ப் பெண்ணாக காட்டிக் கொண்டதே கிடையாது. இதனைப் புரிந்து கொண்ட அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் ஓட்டுச் சீட்டில் முத்திரையை குத்தாமல் அவரது முதுகில் குத்தி விட்டார்கள் என்று சமூக ஊடகங்கள் கேலிசெய்கின்றன.
அமெரிக்காவில் பெண்கள் எவரும் ஜனாதிபதியாக வர முடியாது; ஹிலாரி கூட தோற்றுப் போனார் என்பது ஒருபுறமிருக்க, தேர்தல் பிரசாரம் முழுக்க, தன்னை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்பைப் பற்றியே மும்முரமாகப் பேசி, விமர்சனம் செய்த இவர், தன்னைப் பற்றியும், தன்னுடைய ஆளுமை, ஆட்சியிலிருந்தபோது தான் செய்த சாதனைகள் என எதனைப் பற்றியும் பெரிதாகக் குறிப்பிட்டுப் பேசவில்லை. அதாவது, `டொனால்ட் ட்ரம்ப் வரக்கூடாது' என்று பேசியவர் `தான் ஏன் வரவேண்டும்' என்பதை அழுத்தமாகக் குறிப்பிடவில்லை! இன்னொரு வகையில் அவர் வெறுப்பு அரசியல் பேசிய அவர், டிரம்ப் சுடப்பட்ட போது கூட ஒரு நாகரிகத்துக்கேனும் அனுதாபம் தெரிவிக்கவில்லை!
ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில், `நீங்கள் செய்த மிகப்பெரிய சாதனை என்ன?' என்று கமலா ஹாரிஸைப் பார்த்து கேள்வியாளர் கேட்க கேள்விக்கு `மிகப்பெரிய சாதனையா...? அதை என்னால் உறுதியாக குறிப்பிட்டு சொல்லமுடியாது' என்று மழுப்பலாகப் பதிலளித்தார்.
இவரது தோல்வியால் தமிழ்நாட்டின் உடன் பிறப்புகள் வருத்தப்பட்டபோதிலும், புதிய துணை ஜனாதிபதியின் மனைவி ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் ஆந்திரா கொண்டாடி மகிழ்கின்றது.
`அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற ட்ரம்பின் வாதம் அமெரிக்கர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் கமலா தோல்வி கண்டார் என்பது மட்டுமல்லாமல், நாடே பணவீக்கத்தில் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இரண்டு போர்களிலும் உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் கட்டுப்பாடற்ற ஆதரவும், நிதி- ஆயுத உதவிகளையும் பைடன் - கமலா நிர்வாகம் வழங்கியதை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை; அத்துடன் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அமெரிக்க வாழ் சிறுபான்மையினருக்கும், ஜனநாயகவாதிகளுக்கும் இது கொதிப்பைத்தான் ஏற்படுத்தியது!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments