இந்த 'கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி" என்னும் பாண்டிய மன்னரால் தமிழ் மிகவும் பொலிவு பெற்றது. இவ்வேளையில் தான், நமது திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர்.
திருமயிலாப்பூர் எனும் தவம் பெற்ற ஊரிலே அறிவு உபதேசம் செய்து கொணடிருந்தார்.
வள்ளுவரது அறிவாற்றலும், மாட்சிமையும், மாண்பும், புகழும் பாண்டிய அரசர் உக்கிரப் பெருவழுதியின் செவிகட்கு எட்டியது.
வள்ளுவரின் சகோதரியான ஒளவையாரால் (இது பற்றிய செய்தியைப் பின்வரும் பகுதியில் விளக்கமாகக் காண்போம்) பாண்டிய மன்னன், அவரைப் பற்றி வெகுவாக அறிந்தான். மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். தமது தமிழ்ப்ணிக்கு ஏற்ற மகன் திருவள்ளுவர் என்பதை உணர்ந்தான்.
வள்ளுவப் பெருந்தகையை, தமது தமிழ்ச்சங்க அரசவைக்கு அழைத்து வந்து, அவரது திருவாயினாலேயே, அவரருளியத் திருக்குறளைக் கேட்க அவா கொண்டான் உக்கிரப் பெருவழுதி. தனது விருப்பத்தை ஒளவையாரிடமும், தமது சங்கத்திலே இருக்கும் சுபிலரிடமும் தெரிவித்தான் வேந்தன்.
வேந்தனின் அவாவை நிறைவேற்றும் பொருட்டு. ஔவையாரும். கபிலரும் ஆசிரியர் வள்ளுவரைக் காண திருமைலாப்பூர் சென்றனர். அங்கு, இவ்விருவரும் வள்ளுவரைச் சந்தித்து, உக்கிரப் பெருவழுதியின் தமிழ்த் தாகத்தையும், அவரது பெருமையையும், சிறப்பையும் எடுத்துக்கூறி, அவனின் விருப்பத்தையும் வள்ளுவரிடம் விளக்கி உரைத்தனர். இது கேட்ட வள்ளுவரும் ஒப்புதல் தந்து, ஒளவையார் மற்றும் கபிலருடன் கூடல் மாநகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments