Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-165


குறள் 468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

ஒரு வேலையை எத்தனை பேரு வேணாலும் சேர்ந்து செய்யலாம். சரியா செய்யாட்டா அது உருப்படாமத் தான் போவும். 

குறள் 472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

ஒண்ணை செய்ய நெனைய்க்கும் போது, அதைப்பத்தின சப்ஜாடாவையும் நல்லா தெரிஞ்சுக்கிட்டு அதுல எறங்குனா, முடியாத்துன்னு ஒண்ணுங் கெடையாது. 

குறள் 477
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

யாருக்கும் கொடுத்து உதவணும்னா, நமக்கு இருக்க வசதியைப் பாத்த பொறவு தான் கொடுக்கணும். அது தான் நம்ம கிட்ட இருக்கதை பாதுகாப்பா வைய்க்துக்குண்டான வழி. 

குறள் 478
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

நாம செய்யுத செலவு பெருசா இல்லைன்னா, வரவு கொறைவா இருந்தாக் கூடா பரவாயில்லை, ஒப்பேத்திக்கிடலாம். 

குறள் 485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

நமக்குன்னு ஒரு காலம் வரும்னு நெனைச்சு பொறுமையா காத்து இருக்கவங்க,  இந்த ஒலகத்தையே கூட வென்று காட்டுவாங்க. 

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments