Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-57


மருத்துவர் குமரன் உள்ளே செல்கையில் மகாராணியோடு மந்திரியும் சில சட்ட ஆலோசகர்களும் அமர்ந்திருந்தனர் குமரன் மகாராணிக்கு வணக்கம் வைத்து விட்டு ஏனையோருக்கும் வணக்கம் இட்டார்  மகாராணி வணக்கம் மருத்துவரே சற்று நேரம் அமருங்கள் சில ஐயங்கள் உள்ளன தெளிவு படுத்திச் செல்லுங்கள் என்றார்.

உடனே குமரனும் ஆகட்டும் ராணியரே எனக் கூறி விட்டு அருகே இருந்த நாட்காலியில் அமர்ந்தான். மருத்துவரே நான் நேற்று வருகை தந்தேன் அறிந்தீர்களா? என வினா தொடுத்தார்  மகாராணி அறிந்தேன் ராணியரே நான் தாங்கள் வருவது அறியவில்லை சற்று நேரம் பணிக்காக அறையை விட்டு வெளியேறினேன் என்று கூறி முடித்தான்.

பரவாயில்லை நான் குறை கூறவில்லை மருத்துவரே பயம் வேண்டாம் அறிந்தீர்களா? என்பதை நான் அறிந்திடவே கேள்வி தொடுத்தேன் என்றார் மகாராணி.

அவரே தொடர்ந்தார் சரி உங்கள் வைத்தியப் பணிக்காக என்ன எதிர் பார்க்கின்றீர்கள் பணமா வைரமா பொன்னா பொருளா இல்லை ஆட்சியில் பங்கா எவை வேணுமானாலும் கேளுங்கள்  என் மகளை முழுமையாகக் குணப் படுத்திய பின் வாக்கு மாறமாட்டேன்  என்றார் மகாராணி.

சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு குமரன் கூறினான் "மகாராணி தங்களின் புத்திரியை நலமுடன் ஒப்படைக்கும் போது கேட்கின்றேன் தட்சணை  அப்போது தாங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுங்கள். அதுவரையிலும் நான் எவ்விதமான சன்மானமும் எதிர் பார்த்திட மாட்டேன்"என்று கூறி முடித்தான் .

மகாராணி மந்திரியாரைப் பார்த்தார் மந்திரி அப்போதுதான் வாய் திறந்தார் ."சரி மருத்துவர் குரமனே நீங்கள் கூறுவதை சபை ஏற்றுக்கொள்ள முடிவு பண்ணியதும் கூறுகிறோம். தற்போது எது வரை வைத்தியம் முடிவு சொல்லுகின்றது சற்று மாற்றம் இளவரசியிடம் தென் பட்டதே நான் நேற்றுக் கவனித்தேன் மகிழ்ச்சி .நீங்க உங்கள் பணியைத் தொடங்குங்கள்." என்றார்.

குமரனும் எழுந்து நின்று கூறினான் "மந்திரியாரே எதிர் பாராமல் நான் கேட்ட கெடு முடியும் முன்னரும் இளவரசி நலமாகச் சாத்தியம் உண்டு மறு முறை சந்திக்கும் போது நல்ல முடிவோடு வருகிறேன்" என்று கூறி விடை பெற்றான்.

(தொடரும்)




 Ai SONGS

 



Post a Comment

0 Comments