அதை அடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு டிம் ராபின்சன் 3, வில் எங் 19, மார்க் சேப்மேன் 1, ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளன் பிலிப்ஸை 13 ரன்களில் அவுட்டாக்கிய ஹஸரங்கா அடுத்து வந்த மிட்ச் ஹேயை டக் அவுட்டாக்கினார். அதனால் 59-5 என நியூசிலாந்து தடுமாற்றமான துவக்கத்தைப் பெற்றது.
அப்போது நிதானமாக விளையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் 27 (24), கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 16 (16) ரன்களில் அவுட்டானர்கள். இறுதியில் ஜாக்கரி போல்க்ஸ் 27* (16), இஷ் சோதி 10 (9) ரன்கள் எடுத்தும் 19.3 ஓவரில் நியூசிலாந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கைக்கு அதிகபட்சமாக ஹசரங்கா 2, பதிரனா 2, நுவான் துசாரா 2, துணித் வெல்லலாகே 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
பின்னர் 136 ரன்களை துரத்திய இலங்கைக்கு குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த பதும் நிசாங்கா 19 (14) ரன்களில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாட முயற்சித்து குசால் பெரேரா 23 (17), கமிண்டு மெண்டிஸ் 23 (16) ரன்களில் அவுட்டானார்கள்.
அடுத்ததாக வந்த கேப்டன் அசலங்கா நிதானமாக விளையாடினார். எதிர்ப்புறம் ராஜபக்ஸா 4 ரன்களில் அவுட்டானாலும் ஹசரங்கா மெதுவாக விளையாடி 22 (23) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் அசலங்கா 35* (28) ரன்களும் வெல்லலாகே 11* (7) ரன்களும் எடுத்ததால் 19 ஓவரிலேயே 140-6 ரன்கள் குவித்த இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
சமீபத்தில் இந்தியாவை முதல் முறையாக ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்கடித்த இலங்கை அணி நியூசிலாந்தையும் டெஸ்ட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் தோற்கடித்தது. அதே வேகத்தில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் டி20 தொடரை வென்ற இலங்கை தற்போது இத்தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜகாரி போல்க்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்தப் போட்டியில் அடித்த 23 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இலங்கை வீரராக குசால் பெரேரா மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்தார். அந்த பட்டியல்: 1. குசால் பெரேரா: 1904* 2. திலகரத்னே தில்சன்: 1889 3. குசால் மெண்டிஸ்: 1840
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments