Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-166


குறள் 488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

நம்மோட பகைவர்கள் இருக்காங்கள்லா, அவங்க கிட்ட பொறுத்து போகணும். ஏமுன்னா அவங்களுக்கு முடிவு காலம் வரும்போது அவங்களாவே அழிஞ்சி போவாங்க. 

குறள் 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

ஒரு வேலையில எறங்கதுக்கு முந்தி அதைப் பத்தி முழுசா எதும் தெரியாம எறங்கிடக் கூடாது. எதிரியை நக்கல் கிக்கல் பண்ணாம இருக்கணும்.
 
குறள் 493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

எங்க போயி  அடிச்சா சரியாயிருக்கும்ங்கிறதை கண்டு பிடிச்சு, அவனும் பாதுகாப்பா இருந்துகிட்டு, எதிரிகிட்ட போய் ஒரு சாத்து சாத்துனா, ஒரு சோப்ளாங்கி கூட பயில்வானா மாறி வென்று விடுவான். 

குறள் 495
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

 நீர்ல இருக்கும் போது முதலைக்கு பலம் கூடுதல். ஆனா நீரை விட்டு வெளியே வந்துட்டா, மத்த உயிர்கள் மொதலையை உண்டு இல்லைன்னு ஆக்கிடுங்க. 

குறள் 497:
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

ஒரு வேலையை செய்யும் போது எப்படிச் செய்யணும் எங்க வச்சு செய்யணும்ங்கிறதை நல்ல யோசனை பண்ணிச் சிறப்பாச் செஞ்சாக்கா, அஞ்சாமை மட்டும் கூட இருந்தா போதும். வேறு எந்தக் கூட்டாளியும் வேண்டாம். 

(தொடரும்) 



 Ai SONGS

 



Post a Comment

0 Comments