Ticker

6/recent/ticker-posts

Ad Code



20,000 டன் வெடிபொருட்களுடன் வந்துள்ள ரஷ்ய கப்பல்: கோபத்தில் இங்கிலாந்து மக்கள்


பல நாடுகள் அனுமதி மறுத்த கப்பல் ஒன்றிற்கு இங்கிலாந்து துறைமுகம் ஒன்றில் அனுமதியளிக்கப்பட்டுள்ள விடயம், அப்பகுதி மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

20,000 டன் வெடிபொருட்களுடன் வந்த கப்பல்

20,000 டன் அம்மோனியம் நைட்ரைட் என்னும் வெடிபொருளுடன் MV Ruby என்னும் ரஷ்யக் கப்பல் ஒன்று வருவதாக வெளியான தகவல் பெரும் அச்சத்தை உருவாக்கியது.

2020ஆம் ஆண்டு, லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இதே அம்மோனியம் நைட்ரைக் வெடித்து 218 பேர் கொல்லப்பட்டார்கள், 7,000பேர் காயமடைந்தார்கள்.

ஆனால், தற்போது இங்கிலாந்து வந்துள்ள MV Ruby கப்பலில், பெய்ரூட்டின் ஒரு பகுதியை மொத்தமாக சேதப்படுத்திய அம்மோனியம் நைட்ரேட்டின் அளவை விட 7 மடங்கு அதிக அம்மோனியம் நைட்ரைட் உள்ளதுதான் அச்சத்துக்குக் காரணம்.

கோபத்தில் மக்கள்

அப்படி பல நாடுகள் நிராகரித்த கப்பல், கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்திலுள்ள Great Yarmouth துறைமுகத்தை வந்தடைந்தது.

ஆகவே, அப்பகுதி மக்கள் அந்தக் கப்பலை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அந்த கப்பல் புறப்பட்டுச் சென்றது.

ஆனால், அது நேற்று திங்கட்கிழமை மீண்டும் அதே Great Yarmouth துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலில் இருந்த ரசாயனத்தில், பாதிக்கப்பட்ட ஒரு சிறுபகுதியை கடலில் கொட்டிவிட்டு அந்தக் கப்பல் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எக்கச்சக்கமான வெடிபொருட்களுடன் மீண்டும் அந்தக் கப்பல் Great Yarmouth துறைமுகத்தை வந்தடைந்துள்ளதால் மக்கள் கொந்தளிப்படைந்துள்ளார்கள்.

ஆனால், அம்மோனியம் நைட்ரைட் ஒரு உரம்தான் என்றும், அதனால் ஆபத்தில்லை என்றும், அந்தக் கப்பலில் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை நீக்க உதவுவது நம் கடமை என்றும் துறைமுக அதிகாரிகள் கூற, எல்லாவற்றிற்கும் மேல், அந்தக் கப்பல் ரஷ்யக் கப்பலே அல்ல என தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

jvpnews



 Ai SONGS

 



Post a Comment

0 Comments