Ticker

6/recent/ticker-posts

Ad Code



அதெல்லாம் முடியாது.. வேணும்ன்னா பாகிஸ்தானிடம் நேரடியா இந்தியா கேட்கட்டும்.. பிசிபி சேர்மேன் பேட்டி


பாகிஸ்தானில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு எல்லைப் பிரச்சனை காரணமாக இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. அதன் காரணமாக 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி பெற்றது.

அதே போல இம்முறையும் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்பாத இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கை நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாகிஸ்தான் எப்படியாவது இந்தியாவை தங்களுடைய நாட்டில் விளையாட வைக்க முயற்சித்து வருகிறது. ஏனெனில் இந்தியா விளையாடினால் தான் போதுமான ஸ்பான்சர்ஷிப் உரிமங்கள் கிடைக்கும்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அது பற்றி இந்தியா தங்களிடம் நேரடியாக சொல்ல வேண்டும் என பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார். அதை உடனடியாக தாங்கள் சரி செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் சாம்பியன்ஸ் டிராபியின் ஒரு போட்டியை கூட தங்களுடைய நாட்டுக்கு வெளியே நடத்த முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு தங்களுடைய அணியை இந்தியா அனுப்புவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அது பற்றி எங்களிடம் அவர்கள் நேரடியாக பேச வேண்டும். நாங்கள் அந்த பிரச்சனைகளை நீக்குவோம். உண்மையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை”

“இந்திய அணி விளையாடுவது பற்றிய விவரங்களை நாங்கள் ஐசிசியிடம் கேட்டுள்ளோம். அவர்களிடம் இன்னும் நாங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம். ஒவ்வொரு நாட்டு வாரியங்களும் சொந்த வழியில் சுதந்திரமாக செயல்படுவதற்கான தன்மையை கொண்டுள்ளன. எனவே அந்த உரிமையை அந்தந்த நாட்டு வாரியங்களுக்கு வழங்குவது ஐசிசி பொறுப்பாகும்” என்று கூறினார்.

இந்த சூழ்நிலையில் ஐசிசி அமைப்பின் அடுத்த தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா பொறுப்பேற்க உள்ளார். ஐசிசி பொறுபேற்ற பின் அவர் இந்திய அணிக்கு சாதகமாக இருப்பார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி இம்முறையும் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவாகவே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments