Ticker

6/recent/ticker-posts

மருதப்"பா"வரங்கம்-4

 
புளியமரம்


"ஏந்தும் புளிதான் இன்பு"

(நேரிசை வெண்பா)

சென்றிடும் பாதைக்குச் சேர்ந்த அரணென
வென்றே நிலைத்த வினைக்குன்று--

தொன்றுதொட்டே

மாந்தர் உணவில் மறவாத தோழமையில்
ஏந்தும்"புளிதான்" இன்பு:


மயில்

"ஒளிப்படத்திற்கோர் கவிதை"
"தோகைமயில்    வண்ணமெலாம்"

(எண்சீர் மண்டிலம்)

ஒயிலாக எழிலாக இசைதோன்றும் பாங்கில்
ஒருமலரில் "பெருமலராய் உறைதென்றல் ஏங்க"

பயில்கின்ற நடைக்கானப் பயிற்சியினி மேவும்
பழுதில்லா "ஓவியமாய் படபடத்துத் தாவும்"

நயில்நதியின் அழகெல்லாம் அழகல்ல தோழா
நடனங்கள் "எல்லாமே நகர்ந்தகன்று வீழும்"

துயிலாத முயற்சியிலே படைத்தானோ பிரமன்
"தோகைமயில்" "வண்ணமெலாம் தேவர்களின் அருளே"
             
(தொடரும்)


 Ai SONGS

 



Post a Comment

0 Comments