Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-59


படைத் தலைவன் சென்றதும் அது வரை குழப்ப நிலையில் இருந்த மகாராணி மீண்டும் மந்திரியை நோக்கி விழிகளாலே கேள்விகளைக் கேட்பது போல் பார்த்தார். 

"அரசே உங்கள் சம்மந்தி அடுத்த நாட்டு அரசரின் ஓலைச்சுவடி இவைகள்" என்றார்.

" அப்படியா என்ன கூறி உள்ளார்" என்று ஆர்வத்தோடு கேட்டார் ராணி.

" தங்களைச் சந்திக்க வருவதாகவும் வேரு ஒரு விடையமும் கூறி உள்ளார் ராணியரே" என்று சற்று நிறுத்தினார். 

"என்னைச் சந்திக்க வருவது சரி வரவேற்கிறேன். அடுத்து என்ன? விடையம் கூறி உள்ளார் நீங்க எதற்காகத் தயக்கத் தோடு இருப்பது கூறுங்கள்" என்றார் ராணி .

"அது வந்து நம்ம ராஜகுமாரியை அழைத்துப் போவதற்காகவே வருவதாய்க் கூறி உள்ளார்" என்றார் மந்திரி .

உடனே சிம்மாசனம் விட்டு வேகமாய் எழுந்தார் ராணி.
"என்ன அது என் மகளை அழைத்துப் போகவா? வருகின்றார்கள்" என ஆவேசம் கொண்டார்.

"சற்று அமைதியாக இருங்கள் ராணி அவர்கள் தங்களின் மகளை அழைத்துச் செல்வதாகக் கூறவில்லை அவர்களின் மருமகளைக் கூட்டிக் கொண்டு செல்லவே வருகின்றார்கள் இதை மறுப்பது நம்  சட்டத்துக்குப் புறம்பானவை ஆகையால் அமைதியாக அமருங்கள் அவர்கள் வந்ததும் இருந்து பேசி முடிவு எடுப்போம் புன்னகையோடு வரவேற்று மரியாதை புரிவோம் "என்று ஆலோசனை கூறி விட்டு விடை பெற்றார் மந்திரி  .

மகாராணிக்கு கோபம் கொப்பளித்தது ஒன்றும் செய்திட முடியாது. மந்திரியின் ஆலோசனைக்குக் கட்டுப் பட்டே ஆக வேண்டும்.  சரி வரட்டும் நாளை எனத் தனக்குள்ளே பேசி விட்டு ஓய்வு எடுத்திடச் சென்று விட்டார். 

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments