
குறள் 1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ
நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து.
அம்மா!
ஒருசந்தேகம்!
உனக்கா? சொல்லு!
என்உயிர்த்தோழி
செல்லம்மா அய்ந்தாவது படிக்கிறா!
நான் ஆறாவது படிக்கிறேன்!
அவளோட ரெண்டுநாளா
நான்பேசல!
ஆனால் அவ அன்புக்கும்
நட்புக்கும் அளவே இல்ல!
நிலத்தோட நீர்கலந்ததுபோல
நெருக்கமான நட்பு!
அவளோட கோவிக்கறதுக்கு
இணையா மகிழ்ச்சி கொடுக்கின்ற
வேற உலகம்உண்டா!
சொல்லுமா!
உனக்கு வேறுவேலையே இல்ல.
குறள் 1324
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
அப்பா
பத்துநாள்ல ஊரிலே
இருந்து வந்துவேன்னு
சொன்னாரு பன்னிரண்டு நாளாச்சு!
இன்னக்கி வந்துட்டாரு!
நானும் கோவம கட்டிப்பிடிச்சுப்
படுத்துக்கிட்டேன்!
நாலாவது படிக்கிற எனக்கு
இன்னும் ரெண்டுநாள்ல
தேர்வுவருது!
அதுக்குச் சொல்லித்தர
அப்பாவுக்கு நேரமில்ல!
இந்தக் கோவத்துக்குள்ள
என்மனச் உடைக்கிற
ஆயுதங்களும் இருக்கு!
என்னசெய்ய!
குறள் 1325
தவறிலர் ஆயினும்தாம் வீழ்வார்மென் றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
என்மேல எந்தத்
தப்புமே இல்லை!
ஆனாலும் உயிர்த்தோழிமேய
கோபப்பட்டு
விலகி நின்னு
தனியா தேர்வுக்குப்
படிக்கிறேன்!
அவளோட சேராம இருக்குறதுலயும்
மகிழ்ச்சி இருக்கு-
ஆனாலும் ஏக்கமா இருக்கு.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)





0 Comments