பாகிஸ்தானின் லாகூரில் காற்றின் தரக் குறியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,900ஆக பதிவாகி உள்ளது. இது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உயர்ந்து உள்ளது. 14 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில், உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்ட வரம்பை விட காற்றின் தரம் AQI குறைந்துள்ளது. இதை தொடர்ந்து பள்ளிகளை மூடுவது மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற அவசர நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது. கொடிய PM2.5 மாசுபாட்டின் அளவு, ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் 610 ஆக உயர்ந்துள்ளது. உலக சுகாதார அமைப்பால் ஆரோக்கியமானதாகக் கருதப்படும், 24 மணிநேரத்தில் 15 என்ற வரம்பை விட இது 40 மடங்கு அதிகமாகும்.
குடிமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனைகளில் smog counters அமைக்கப்பட்டுள்ளன என்று பஞ்சாபின் மூத்த அமைச்சர் மரியம் அவுரங்கசீப் கூறியுள்ளார். மேலும், மாசு அளவைக் குறைப்பதற்காக மூன்று சக்கர வண்டிகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளன. அதேபோல், சில பகுதிகளில் கட்டுமானத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான இந்தியாவில் இருந்து வீசும் காற்று மாசுபாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான செயலாளர் ராஜா ஜஹாங்கீர் அன்வர் கூறியுள்ளதாவது,
இந்தியாவில் இருந்து வரும் கிழக்குக் காற்றாலையால் அவதிப்படுகிறோம். நாங்கள் யாரையும் குற்றம் சொல்லவில்லை. இது இயற்கையான நிகழ்வு என்று அவர் கூறினார். வட இந்தியாவை போலவே, பாகிஸ்தானிலும் குளிர்காலத்தில் மாசுபாடு அதிகரிக்கிறது. இது மக்களிடையே சுவாசக் கோளாறுகள், இருமல் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
இதற்கிடையில் கடந்த திங்கள்கிழமை மதியம் டெல்லியில் AQI 276ஆக இருந்தது. அதாவது, AQI 151 முதல் 200 வரை இருந்தால் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் 201 முதல் 300 வரையிலான AQI மதிப்பீடு மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் 300க்கு மேல் இருந்தால் AQI மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அர்த்தம். உலக சுகாதார மையத்தால் பாதுகாப்பானதாகக் கருதப்படும் அளவை விட அதிகமான மாசுபாடு லாகூர் மக்களின் ஆயுட்காலத்தை சராசரியாக 7.5 ஆண்டுகள் குறைக்கிறது என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
UNICEF-இன் கூற்றுப்படி, தெற்காசியாவில் கிட்டத்தட்ட 600 மில்லியன் குழந்தைகள் அதிக அளவு காற்று மாசுபாட்டிற்கு ஆளாகிறார்கள் என்றும், குழந்தை பருவ நிமோனியா இறப்புகளில் பாதி காற்று மாசுபாட்டினால் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்