
அதை அடுத்து களம் இறங்கிய அந்த அணிக்கு ஃபர்கான் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் பாபர் அசாம் அதிரடியாக விளையாடி 41 (28) ரன்கள் எடுத்தார். அதனால் 61-1 என்ற நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தானுக்கு பாபர் அசாமை அவுட்டாக்கிய ஆடம் ஜாம்பா மறுபுறம் தடுமாறிய ஹசிபுல்லா கானை 24 (19) ரன்களை அவுட்டாக்கினார்.
அடுத்ததாக வந்த உஸ்மான் கான் 3, ஆகா சல்மான் 1, இர்பான் கான் 10, அப்பாஸ் அப்ரிடி 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இறுதியில் அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த ஆஸ்திரேலியா 18.1 ஓவரில் பாகிஸ்தானை வெறும் 117 ரன்களுக்கு சுருட்டி வீசியது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆரோன் ஹார்ட்டி 3, ஆடம் ஜாம்பா 2, ஸ்பென்ஷர் ஜான்சன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு மேத்தியூ ஷார்ட் 2, ஜேக் பிரேசர் 18, கேப்டன் ஜோஸ் இங்லிஷ் 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 61* (27) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 11.2 ஓவரிலேயே 118-3 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
அதன் காரணமாக 3 – 0 (3) என்ற கணக்கில் பாகிஸ்தானை ஒயிட்வாஸ் செய்து இத்தொடரை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வென்றது. குறிப்பாக இதே சுற்றுப்பயணத்தில் சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் 22 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் ஒருநாள் தொடரை வென்றது. அந்த தோல்விக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 7 டி20 போட்டிகளிலும் (2019 – 2024* வரை) ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெற்றுள்ளது. அதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து அதிக டி20 போட்டிகளில் வென்ற அணி என்ற உலக சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதற்கு முன் 2023 – 2024 காலகட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து 6 வெற்றிகளை பெற்றது முந்தைய சாதனை.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments