நட்சத்திரங்கள் நிலையானவை மற்றும் மாறாதவை. எப்போதாவது, ஒரு நட்சத்திரம் முன்பு இல்லாத இடத்தில் பிரகாசமாக தோன்றும். பின்னர் அது சில நாட்கள் அல்லது வாரங்களில் மறைந்துவிடும். இந்த பளிச்சிடும் தோற்றத்திற்கான காரணம் கொரோனே பொரியாலிஸ் நட்சத்திர அமைப்பு.
பூமியிலிருந்து 3 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கொரோனே பொரியாலிஸ் அமைப்பானது, ஒரு இறந்த வெண் குறுமீன் மற்றும் செம்பெருமீன் என்ற நட்சத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த நட்சத்திர அமைப்பு ஒவ்வொரு 80 வருடங்களுக்கும் ஒரு முறை வெடித்து, ஒரு நட்சத்திரத்தை மீண்டும் கொண்டு வருகிறது. இதனால், இது ஜாம்பி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் வெடிப்பு நிகழ்வை, நோவா என்று நாசா கூறுகிறது. அப்படி கடைசியாக 1946-இல் இதுபோன்ற வெடிப்பு நிகழ்ந்தது.
அதைத்தொடர்ந்து இந்த அரிய நிகழ்வு 2026 ஆம் ஆண்டில் நிகழும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதேநேரம், வானில் தென்படும் சில நிகழ்வுகளின் அடிப்படையில் நோவா வெடிப்பு முன் கூட்டியே நிகழ வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
நோவாவாக மாறுவதற்கு முன்பு குறிப்பிட்ட நட்சத்திரம் சுமார் ஓராண்டுக்கு மங்கிவிடும் நிலையில், கொரோனே பொரியாலிஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் மங்கத் தொடங்கியது. இதனால், நோவா வெடிப்பு விரைவில் நிகழும் என்பதற்கான அறிகுறிகளை இவை அளித்திருக்கிறது.
நோவா வெடிப்பின் போது உருவாகும் ஜாம்பி நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தைப் போல பிரகாசமாக இருக்கும் என்றும் இந்த புதிய நட்சத்திரத்தை குறைந்தபட்சம் சில நாட்களுக்காவது வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தங்களது வாழ்நாளில் ஒருமுறை மட்டும் நிகழும் இந்த பிரபஞ்ச நிகழ்வை காண்பதற்காக விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்