Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-67


340. வினா ஆக்கம் யாரைச் சென்றடையும்?
விடை: சோர்வில்லாத ஊக்கம் உடையவனை 
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை.(594)

341. வினா : உலகில் வள்ளல் தன்மை மிக்கவர் என்னும் செருக்கு யாருக்கு வரும்?
விடை: மன உறுதி மிக்கவருக்கு 
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு.(598)

342. வினா : குடும்பம் என்ற விளக்கு ஒளி குறைவது எப்போது?
விடை: சோம்பல் மிகும் போது 
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.(601)

343, வினா: கெடுபவர் மிகவும் விரும்புவன எவற்றை?
விடை: காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், தூக்கம் 
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.(605)

344. வினா : பெருமை தருவது எது?
விடை: முயற்சி
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.(611)

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments