Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-58


குமரன் வெளியானதும் கூடி நின்ற ஏனையோரும் கலைந்து சென்றனர். 

மந்திரியும் மகாராணியும் சில பல முக்கிய விடையங்களைப் பேசிக் கொண்டு இருக்க ஒட்டன் ஒருத்தன் விரைந்து வந்து ஓலை ஒன்றை நீட்டினான் மரியாதையோடு படைத் தலைவனிடம்.

அதை வாங்கிப் படித்து விட்டு படைத்தலைவன் மந்திரியை நோக்கி விரைந்தான்.

"வணக்கம் மந்திரி அவர்களே" என்னும் குரல் கேட்டதும் மந்திரி வாசலைப் பார்த்தார். 

"வணக்கம் வாருங்கள் தலைவரே" என்றார் மந்திரி.

நன்றி கூறி விட்டு நுழைந்தவன் "மன்னிக்க அரசே தாங்கள் இருப்பதை கவனிக்கத் தவறி விட்டேன்"  என்றவன்  "வணக்கம்" தெரிவித்தான் .

"வணக்கம் படைத் தலைவரே தங்கள் கவனம் சிதறுவது நியாயம் இல்லையே சரி மீண்டும் ஒரு முறை அலட்சியம் தவிர்க்க" என்று மகாராணி  புன்னகையோடு கூறி முடித்தார். 

 மீண்டும் மன்னிக்க அரசே கண்டிப்பாக தவற மாட்டேன். என்றவன் மந்திரியிடம் ஓலையை நீட்டினான்..

படித்து விட்டு ராணியைப் பார்த்தார் மந்திரி கலக்கம் அடைந்த மனதுடன்.

"என்ன? மந்திரியாரே தங்கள் பார்வையில் ஏதோ ஒரு சிந்தனை தோணுகின்றது யார் அனுப்பிய ஓலை இவை இதில் அப்படி என்ன இருக்கின்றது" எனக் கேள்விகளைக் கொட்டினார் மகாராணி. 

சற்று நேரம் மௌனம் காத்து விட்டு மந்திரி படைத் தலைவனிடம் கூறினார் "தங்கள் வரவை மகிழ்வோடு வரவேட்கின்றோம்.  என்னும் பதில் ஓலையை அனுப்பி வையுங்கள்  நம் ஒட்டனிடம் நீங்கள் செல்லலாம்" எனக் கூறினார் தலைவனும் "ஆகட்டும் அப்படியே செய்து விடுகின்றேன்" என்றவன் வணக்கம் கூறி விடை பெற்றான். 

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments