அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்


Purple Frog: பன்றி போன்ற மூக்கு உடைய இவை இந்தியாவில் (கேரளா) காணப்படுகிறது, 2003 ஆண்டுதான் கண்டுபிடிக்கபட்டது. இது பூமிக்கடியில் சுமார் 13 அடி ஆழத்தில் தான் வாழும். இனபெருக்க காலத்தில் வெளிவந்து இரண்டுவாரங்கள் மட்டுமே பூமியின் மேல் உலா வரும்.


Monito Del Monte (little mountain monkey): தென் அமெரிக்காவில் காணப்படும் இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் இருந் இங்கு இடம் பெயர்ந்து வந்ததாக கருத படுகிறது, இது பொதுவாக குரங்கு இனத்தை சாராதவை. இவற்றின் வாலில் அதிக அளவு கொழுப்பினை சேமித்து வைத்துகொள்ளும், உணவு இல்லாத காலங்களில் இதனை பயன்படுத்தி கொள்ளும். 5 inch அளவே வளரும். இதுவும் அழியும் தருவாயில் உள்ள ஒரு உயிரினமாகும்.


Echidna: முட்டையிட்டு பாலூட்டும் இரண்டு உயிரினங்களில் இதுவும் ஓன்று (மற்றொன்று பிளாட்டிபஸ்). பல் இல்லாத இவை கரையான்களை உண்டு வாழும். முட்டையிட்டு அதனை தனது வயிற்று பகுதியில் உள்ள பையினுள் வைத்து கொள்ளும், இதற்க்கு பாலூட்ட காம்பு கிடையாது ஆனால் வயிற்று பகுதியில் தோல் குமிழ் போன்று அமைந்திருக்கும், இதன் வழியாக கெட்டியான பாலினை சுரக்கும் அதனை குட்டிகள்குடிக்கும்.
  

Bumblebee Bat: தாய்லாந்து நாட்டில் காணப்படும் உலகின் மிக அழகான மிக சிறிய வவ்வால் இது தான் ( ஒரு இஞ்சு) . உலகில் தற்பொழுது சுமார் இருநூறு வவ்வால்களே உயிர் வாழ்கின்றன.
 

Dugong: யானையின் தோற்றமும் திமிங்கலத்தின் வாலை போன்றும் உள்ள இவை நீரில் வாழும். அதிகமாக வேட்டையாடபடுவதால் இதுவும் அழியும் தருவாயில் உள்ள உயிரினமாகும்.



Spring Hare: கங்காரு மற்றும் முயலின் தோற்றத்தை ஒத்து உள்ள இவை சிறிய முன் கால்களையும், நீண்ட பின்கால்களையும் உடையது.
  
eegarai


 



Post a Comment

Previous Post Next Post