எனது வயது 52, அண்மைக் காலத்தில் இருந்து ஞாபக மறதி கூடிக்கொண்டு செல்கின்றது. வியாபார கொடுக்கல் வாங்கலில் பல தவறுகள் ஏற்படுகின்றன. இதனால் வியாபாரம் செய்ய முடியா நிலை. இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா ?
ரிஸ்வா, அக்குறணை,
ஞாபக சக்தி என்பது மூளையின் நேரடி தொழிற்பாடுகளில் ஒன்றாகும். ஒரு மனிதனுடைய அன்றாட தொழிற் பாடுகளுக்கும் மற்றும் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விருத்திக்கும் சமூகத்துடன் இணைந்து சுமுகமாக வாழ்வதற்கும் ஞாபக சக்தி மிக முக்கியமாகும்.
அதேபோன்று ஞாபக மறதி என்ற ஒரு விடயத்தையும் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையிலும் அல்லாஹூத் தஆலா ஏற்படுத்தியுள்ளான். இவ்வாறு ஞாபக மறதி என்ற ஒரு விடயத்தை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கா விட்டால் மனிதன் ஒருவரை ஒருவர் பல வருடங்களுக்கு முன்பு நடந்த கசப்பான நிகழ்வுகளையும் அநீ திகளையும் ஞாபகத்தில் வைத்து பழி வாங்கிக் கொண்டிருப்பான். எனவே சாதாரணமாக எமது சகலரினது வாழ் விலும் ஏற்படக்கூடிய இந்த மறதியானது சமுதாய சகவாழ்விற்கும் ஒற்றுமைக்கும் மிக முக்கியமானதாகும்.
இதற்கு மாறாக அண்மைக்காலங்களில் இருந்தும் வழமைக்கு மாறாகவும் தனது அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடியதுமான ஞாபக மறதியே ஒரு நோயாக கருதப்படுகின்றது. இந்நிலையை நோயாளியும் அவரது குடும்பத்தினர்களும் அவருடன் நெருங்கிப் பழகுபவர்களுமே முதலில் அறிவார்கள். இவ்வாறு ஏற்படும் ஞாபக மறதி தனது செயற்திறமையின் வளர்ச்சிக்கும் பாதகமாக இருப்பதோடு, இந்நிலை தொடர்ந்து இருப்பதனால் காலப்போக்கில் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஞாபக மறதி என்பது சிறுவர் முதல் முதியோர் வரை ஏற்படலாம். சிறு வயதில் ஞாபகத்திறன் வளர்ச்சியடையாமைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படக் கூடிய நோய்கள் போசனைக் குறைவு, பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள், பிள்ளைகளின் மனநல வளர்ச்சிக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் போன்றவை அடங்குகின்றன. நடுத் தர வயதை அடையும் போது மனநல நோய்கள், அதிக கொலஸ்ரோல் காரணமாக இரத்த நாடிகளின் விட்டம் குறைந்து மூளைக்கான இரத்த ஓட்டம் குறைதல், அதிக வேலைப்பளு போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.
அத்துடன் மன நலப்பாதிப்புக்கு பாவிக்கும் சில மருந்துகள், தூக்க மாத்திரைகள் தொடர்ந்து பாவிப்பதாலும் இந்நிலை உருவாகலாம்.
வயோதிப வயதை அடையும் போது மூளையின் சகல தொழிற்பாடுகளும் குறைந்து கொண்டு செல்வதனால் தான் வயோதிப வயதில் ஞாபக மறதி அதிகமாக ஏற்படுகின்றது.
ஞாபக மறதி வராமல் தடுப்பதாயின் ஆரம்பத்திலிருந்தே இயற்கையான உணவுகளை உட்கொண்டு இரசாயனப் பொருட்கள் அடங்கிய பதனிடப்பட்ட உணவுகளைத் தவிர்த் துக்கொள்ளல் வேண்டும்.
மண்ணினால் படைக்கப்பட்ட மனிதன் மண்ணிலிருந்து உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வதே இயற்கை நியதி. எமது முன்னோர்கள் இதை சரிவர கடைப்பிடித்து வந்ததனால் பல்லாண்டு காலம் சுகமாக வாழ்ந்தார்கள். அத்துடன் தொடர்ச்சியான உடற்பயிற்சியும். மனநிம்மதியான வாழ்க்கையும் ஞாபக சக்திக்கு மிக முக்கியமாகும்.
மேலும் மதுபானம் அருந்துதல், புகைத்தல், போதைப் பொருள் பாவனை போன்றவையும் ஞாபக மறதியை ஏற்படுத்தக்கூடியன. ஞாபக மறதியின் ஆரம்ப அறிகுறிகளாக செயற்றிறன் மிக்க வேலைகளில் ஓரளவு குறைபாட்டைக் காணலாம்.
ஞாபக மறதி ஏற்பட்டுவிட்டால் இரணனலில் கிடைக்கும் வாகளை இயற்கை விதி முறைகளுக்கு ஏற்ப தயாரித்து உண்ண வேண்டும். பொதுவாக மரக்கறி வகைகள், தானிய வகைகள், கீரை வகைகள் போன்றவைகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும். அத்துடன் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்ளல், மூளையின் செயற்திறனைக் கூட்டக்கூடிய பயிற்சிகளில் ஈடுபடுதல், வாசித்தல் போன்றவைகளிலும் முக்கியமாகும்.
மேலும் நடுத்தர வயதை தாண்டும் போது உடம்புக்கு சில விட்டமின்கள் தேவைப்படலாம். எனவே வைத்தி யர்களின் ஆலோசனையைப் பெற்று தேவையான விட்டமின்களை உட்கொள்ளல் வேண்டும்.
யுனானி வைத்தியத்துறையில் இயற்கை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட விற்றமின் சத்துள்ள பக்க விளைவுகளற்ற மருந்துகள் உள்ளன. அதேபோன்று மருத்துவ குணமுள்ள உணவு வகைகளை பற்றியும் யுனானி மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞாபக மறதியை ஆரம்பத்திலேயே இனங்கண்டு அதற்குரிய சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் காலப் போக்கில் அவை டிமென்சியா என்ற நிரந்தர ஞாபகமின்மை நிலையை உருவாக்கும்.
இங்கு கேள்வி கேட்டிருப்பவர் தனக்கு 52 வயது எனவும் ஞாபக மறதி அண்மைக் காலத்திலிருந்து அதிகரித்துக்கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இங்கு போதியளவு தகவல் தரப்படாமையினால் மேல திகமாக எதையும் கூற முடியாதுள்ளது.
இறுதியாக வாசகர்களுக்கு விசேடமாக இளம் வாலிபர்களுக்கு ஒரு செய்தியாக எனது பல வருட கால மருத்துவத் தொழிலில் நான் அவதானித்த ஒரு விடயத்தைக் கூறுகின்றேன்.
அது வாலிபர்கள் இன்டர்நெட் ஊடாக கிடைக்கும் ஆபாசக் காட்சிகளை தமது வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பதனால் ஞாபக மறதி, ஆண்மைக்குறைவு போன்ற நோய்களுக்கு ஆளாகுகின்றார்கள்.
இதை வாசிப்பவர்கள் இது விடயமாக இளம் வாலிபர்களை விழிப்புணர்வு செய்ய வேண்டியது கடமையென நினைக்கின்றேன்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments