Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -73


குறள் 1320
நினைத்திருந்து நோக்கினும் காயும் 
அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று.

ஏய் மது! 
என்ன அப்பிடிப்பாக்குற! 
இல்ல இன்று உனக்குப்பிறந்தநாள்! 
இந்த உடை உளக்குஅழகா 
இருக்கு தேவி! 
இந்தபாரு 
என்னயாரோட ஒப்பிட்டு 
அப்படிப்பாக்குற! 
ஒப்பிட்டுப்பாக்குறது 
எனக்குப்பிடிக்காது! 
தெரியும்ல! 
அம்மா கோவிச்சுக்காதே! 
சும்மாதான் பாத்தேன்!
இன்று நாம் இணக்கமா 
இருப்போம்! சரியா?

குறள் 1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் 
ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு.

நாம் ஆறாவது படிக்கிறோம்! 
வள்ளி அய்ந்தாவது படிக்கிறா! 
அவனோட நீ ஒருவாரமா 
பேசல! 
அவஉன்னைச் சுத்திச்சுத்தி வர்றா! 
நீஏன் பிகுபண்ற? பாவரசி! 
இந்தபாரு அவமேல குத்தமில்ல! 
ஆனால் இப்படி பொய்க்கோபம் 
காட்டினா 
என்மேல நட்பும் அன்பும் 
வளரும்! தழைக்கும்! 
அதுக்குத்தான்! புரிஞ்சுதா? 
என்னமோ சொல்ற 
கேட்டுக்குறேன்!

குறள் 1322
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி 
வாடினும் பாடு பெறும்.

என்உயிர்த்தோழி அரசி 
என்னோட பேசாம 
வெலகியே இருக்குறா!
இதுவருத்தமா இருக்கு! 
எங்களோட ஊஞ்சலாடும் 
அன்புல தொய்விருந்தாலும் 
இந்த வயசுலவர்ர கோபச் சீண்டல்கள் 
காரணமா இருந்தாலும் 
அதனால் ஏற்படும் 
துன்பம் பெருமையுடையதாகவே 
இருக்குது.

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments