
தஞ்சாவூர் பொம்மை

"நிகழ்வினை நோக்கு நெறிவழியே"
(நிரையசைக் கட்டளைக் கலித்துறை)
தலையினை ஆட்டித் தருவென வீழ்வார்
தரமிழப்பார்
வலையில் புகுந்தே வருந்திடும் மீன்போல்
வதைபடுவார்
நிலையினை ஓரார் நிகழ்வினைப் பாரார்
நினைவினிலே
கலையாய்த் தலையைக் கனிவாய் அசைப்பார்
கதைகெடவே!
மனிதனின் மானம் மதித்திடத் தானதில்
மாண்பிருக்கும்
தனிவழி கொண்டோர் தமிழரே என்பார்
தகைமையிலே
கனிபோல் மொழியும் கருணை மனமும்
களிப்பொளிரும்
புனிதமே கொள்ளப் புதுவழி என்றும்
புகழ்பெறுமே!
வரையரை நீதி வகுத்தான் தமிழன்
வகையுணர்ந்தே
தரைவழி எல்லாம் தனதுற வென்றே
தலைநிமிர்ந்தான்
திரையெதும் இல்லாத் திறமையைக் கொண்டே
திகழ்ந்திருந்தான்
உரைகளி னாலே உலகினை வென்றான்
உயர்வினிலே!
நிறைவெனும் வாழ்வு நிலைகுலைந் தாற்போல்
நிழல்பெருக
மறைதரும் நீதி மறந்தவன் ஆனான்
மமதையிலே
கறைகள் நிறைத்தான் களையென நின்றான்
கணக்கினிலே
முறைகள் முறித்து முழுமனம் கெட்டு
முடங்கினனே!
எழுந்திடு தோழா இனிநீ அறிவால்
எழில்பெருக்கு
வழுவா நிலையில் வழங்கிடு தேர்ந்த
வழிதனையே
அழுகிய தோர்கனி ஆகுமோ உண்ண
அதையுணரு
தொழுதது போதும் துடித்தெழு நாளும்
தெளிவுறவே!
பொறுத்தலைப் போக்கிப் பொருதிடு நம்தமிழ்
பேர்பெறவே
சிறுமையே என்றால் சிதைவுற மானம்
சிறுதுகளா?
துறவிகள் போலே தெரிபவர் கண்டெழு
தோளுயர்த்து
அறமது வீழ அசைதல் தலையா அதுபிழையே!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)





0 Comments