அது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கட்டி என்று தெரிவிக்கப்பட்டது.
சிகிச்சை 3 மணி நேரத்திற்கு நீடித்ததாகக் கூறப்பட்டது.
55 வயது பெண் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்று Hindustan Times நாளேடு தெரிவித்தது.
அவர் கடந்த சில மாதங்களாகக் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டிருந்தார்.
அவர் ஆப்பிரிக்காவில் பல மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ உதவியை நாடினார். ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை.
குர்காவுன் நகருக்குச் சென்றிருந்த அந்தப் பெண்ணுக்குப் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக Hindustan Times நாளேடு குறிப்பிட்டது.
அவரது வயற்றில் இருந்த கட்டி ஒரு காற்பந்தின் அளவுக்கு இருந்ததாகக் கூறப்பட்டது.
"சிகிச்சையில் பல சிக்கல்கள் இருந்தன. கட்டி 9.1 கிலோகிராம் அளவில் இருந்தது. ஆனால் அதனை வெற்றிகரமாக நீக்கிவிட்டோம்," என்று சிகிச்சை அளித்த மருத்துவர் சொன்னார்.
அந்தப் பெண் கூடிய விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments