Ticker

6/recent/ticker-posts

Ad Code



உக்ரைனில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா!

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே  போர் நடந்து வருகிறது. வான், கடல், நிலம் என மும்முனை தாக்குதலால் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனில் உள்ள ஏராளமான இராணுவ தளங்களை தாக்கி அழித்தன.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன், உக்ரைன், ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு போர் தொடங்கியதில் இருந்தே ஆயுதங்களை சப்ளை செய்துள்ளன. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை செய்து இந்த போர் பல மாதங்கள் மற்றும் நாட்கள் நீடித்ததற்குஉதவி புரிந்தான்.

இதற்கிடையே ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகள் திடீர் தாக்குதல் நடத்தி ரஷ்யா மீது படையெடுத்தனர். எனினும், அங்கு உக்ரேனியப் படைகள் கடும் பின்னடைவைச் சந்தித்த நிலையில், ரஷ்யப் படைகள் கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து முன்னேறின.

கடும் போரில்  உக்ரைனில் உள்ள முக்கியமான ராணுவ நகரமான செலிடோவோ நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த போரில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

 ரஷ்யர்களின் கைகளில் உக்ரைனின் Selydove நகரம் விழுந்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.




 Ai SONGS

 



Post a Comment

0 Comments