Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானில் முடக்கநிலை தளர்வு


பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நான்கு நாள் முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் (Imran Khan) ஆதரவாளர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த கலவரங்களில் சுமார் ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சிறையிலிருக்கும் திரு இம்ரானை விடுதலை செய்யும்படி அவருடைய ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.

திரு கானின் கட்சி, இரவில் நடத்தப்பட்ட பெரியளவு கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை ரத்துசெய்துள்ளது.   எனினும் விடுதலை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடவிருப்பதாய் அக்கட்சி சொன்னது. 

இந்நிலையில் சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இணையச் சேவைகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் பாகிஸ்தானில் அமைதி முழுமையாகத் திரும்பவில்லை என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
 

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments