Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலின் தாக்குதலைக் கையாளத் தயாராக இருப்போம் - ஹிஸ்புல்லா


ஹிஸ்புல்லா பாலஸ்தீனர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று உறுதி அளித்துள்ளது.

அதற்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு நடப்புக்கு வந்துள்ள நிலையில் ஹிஸ்புல்லா அதன் நிலைப்பாட்டை வலியுறுத்தியது.

இஸ்ரேலின் உள்நோக்கங்களையும் தாக்குதல்களையும் கையாள ஹிஸ்புல்லாக்கள் தயார்நிலையில் இருப்பார்கள் என்று அது சொன்னது.

லெபனான் எல்லைகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் இஸ்ரேலிய படை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஹிஸ்புல்லா கூறியது.

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் செய்துகொண்ட உடன்பாட்டின்படி சண்டை நிறுத்தம் 60 நாள்கள் நீடிக்கும்.

அவ்வேளையில் லெபானின் எல்லைகளிலிருந்து இஸ்ரேலிய படைகள் மீட்டுக்கொள்ளப்படவேண்டும்.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments