Ticker

6/recent/ticker-posts

வெடித்து சிதறிய மனித உடல்கள்..பாகிஸ்தானில் சர்வ நாசமான நகரம் - நடந்தது என்ன?


பாகிஸ்தான் குவெட்டா ரயில் நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இன்று காலை திடீரென பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 46 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் உயிர்ப் பலி அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,பெஷாவருக்கு ஜஃப்பார் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குக் குறிவைக்கப்பட்டதாகவும் , ஆனால் அந்த ரயில் புறப்பட்டதால் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது.

ஒருவேளை அந்த ரயில் தாமதமாகப் புறப்பட்டு இருந்தால் உயிர்ப் பலி அதிகரிக்கக் கூடும் என அந்நகரத்தின் காவல்துறை ஆணையர் ஹம்சா ஷஃப்கத் தெரிவித்துள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (Balochistan Liberation Army) எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தற்பொழுது தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த சிசிடிவி கேமரா வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

ibctamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments