Ticker

6/recent/ticker-posts

செவ்வாய் கிரகத்தில் பெருங்கடல் இருந்திருக்கலாம்: ஆய்வில் கண்டுப்பிடிப்பு

சீனத் துணைக்கோள் செவ்வாய் கிரகத்தில் முன்பு பெருங்கடல் ஓடியது என்பதைக் குறிக்கும் ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.

Nature ஆய்விதழில் அந்தக் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டன.

கடலின் கரையையும் துணைக்கோளம் உத்தேசமாக வரைந்துள்ளது.

பில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் மூன்றில் ஒரு பாதியில் பெருங்கடல் வழிந்தோடியதைப் பற்றிப் பல காலமாக விஞ்ஞானிகளிடையே விவாதிக்கப்படுகிறது.

2021இல் சீனாவின் Zhurong துணைக்கோள், செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததாக நம்பப்படும் இடத்தில் இறங்கியது.

அதிலிருந்து அங்கு அது ஆய்வு நடத்தி வருகிறது.

சுமார் 3.7 பில்லியன் வருடங்களுக்கு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்ததால் பெருங்கடல் உருவானது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அதன் பின் பெருங்கடல் உறைந்ததால் அது மறைந்தது. 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அது மறைந்துபோனது.

ஆனால் ஆய்வு முடிவுகள், செவ்வாய் கிரகத்தில் கண்டிப்பாகப் பெருங்கடல் இருந்தது என்பதைக் குறிக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதை உறுதிப்படுத்த செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்குக் கற்களைக் கொண்டு வந்து ஆய்வு செய்ய வேண்டும்.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments