கடந்த மாதம் 1ம் தேதி இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஏவி ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், கடந்த 26ம் தேதி ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதியில் உள்ள 20 ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், ஈரானில் அனைத்து அதிகாரங்களும் படைத்த உச்ச தலைவர் அயதுல்லாஹ் கமேனி (85) பேசிய வீடியோ ஒன்று அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
அதில் கமேனி, ‘‘நமது எதிரிகள், அது இஸ்ரேலாகட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும், ஈரான் மக்களுக்கும், இந்த தேசத்திற்கும், ராணுவத்திற்கும் எதை அவர்கள் கொடுத்தார்களோ, அதே போன்ற மிகக்கடுமையான அழிவுகரமான தாக்குதலை நிச்சயம் பெறுவார்கள்’’ என்றார்.
நீங்கள் எதை விதைத்தீர்களோ அதைப் பெறுவீர்கள் என்று அவர் மேலும் கூறினார்,
இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல்
கடந்த 24 மணி நேரத்தில் வடக்கு காசாவின் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 84 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மத்திய இஸ்ரேலுக்கு உட்பட்ட தலைநகர் டெல் அவிவின் வடக்குப் பகுதிகயை நோக்கி லெபனானில் இருந்து மூன்று வான்வழி ஏவுகணை ராக்கெட்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. இதில் கட்டிடங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்