Ticker

6/recent/ticker-posts

கலர் முதல் இன்டர்நெட் வரை எக்கச்செக்க கெடுபிடி... இப்படியும் ஒரு நாடு இருக்குதா!


இன்றைய நவீன யுகத்தில் உலகில், இன்டர்நெட் இணைப்பு முதல் நிறம் வரை பல கட்டுப்பாடுகள் கொண்ட நாட்டைக் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் துர்க்மெனிஸ்தான். விசித்திரமான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் நிறைந்த அந்நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய நவீன யுகத்தில் உலகில், இன்டர்நெட் இணைப்பு முதல் நிறம் வரை பல கட்டுப்பாடுகள் கொண்ட நாட்டைக் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் துர்க்மெனிஸ்தான். விசித்திரமான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் நிறைந்த அந்நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த மத்திய ஆசிய நாடுதான் துர்க்மெனிஸ்தான். 65 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்நாடு உலகின் மிக ரகசியமான நாடுகளில் ஒன்றாகும். பழங்கால நகரமான மெர்வ், சிறியதாக இருந்தாலும் பல வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்களைக் கொண்டது.
துர்க்மெனிஸ்தானின் தலைநகரான அஷ்கபாத் 'வெள்ளை பளிங்கு நகரம்' என்று அழைக்கப்படுகிறது. நகரம் முழுக்க வெள்ளை பளிங்குகளால் கட்டப்பட்ட கட்டிடங்களைக் காணலாம். அதிக வெள்ளை பளிங்கு கட்டிடங்களைக் கொண்ட நகரம் என கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது. 2018இல் முன்னாள் அதிபர் குர்பங்குலி பெர்டிமுஹமடோ, நகரின் சீரான வெள்ளை நிறத்தை தக்கவைக்க அனைத்து வாகனங்களுக்கும் வெள்ளை நிறம் மட்டும்தான் பூசப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். வாகனங்களுக்கு வெள்ளை நிறம் பூசாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது. கருப்பு கார்கள் பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

அஷ்கபாத் அற்புதமான கட்டிடக்கலைக்குப் பேர் பெற்றதாக இருந்தாலும் இந்த நகரம் பெரும்பாலும் வெறிச்சோடி இருக்கிறது. அஷ்கபாத்தின் தெருக்களில் போதுமான இடவசதியும், பரந்த பாதைகளும், கம்பீரமான கட்டிடங்களும் இருந்தாலும், மக்கள் நடமாடுவதை எப்பொழுதும் பார்க்க முடியாது. ஏன் என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் அஷ்கபாத் நகரத்தின் பல பகுதிகளில் அடிக்கடி அரசாங்க அணிவகுப்புகளும் நிகழ்வுகளும் நடக்கும்.

அஷ்கபாத் நகரத்திற்கு அப்பால், துர்க்மெனிஸ்தானில் தனித்துவம் வாய்ந்த வேறு விஷயங்களும் உள்ளன. துர்க்மெனிஸ்தானில் உள்ள சட்டங்கள் இணைய பயன்பாட்டிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இன்டர்நெட் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடு உள்ளது. அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்பட்ட இணையத்தை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.
பல கெடுபிடி சட்டங்கள் இருந்தாலும், துர்க்மெனிஸ்தான் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. 'நரகத்திற்கான கதவு' என்று அழைக்கப்படும் தர்வாசா பள்ளம் ஓர் இயற்கை அதிசயமாகும். 1971ஆம் ஆண்டு சுரங்கம் தோண்டும்போது ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, பள்ளத்தில் தீ பற்றி எரிகிறது. பல ஆண்டுகளாக அங்கு தீ எரிந்துகொண்டிருக்கிறது. இதைப் பார்க்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

asianetnews



 Ai SONGS

 



Post a Comment

0 Comments