பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிமல் ரத்நாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார்.
நாடாளுமன்றத்தில் சபைத் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நிலையியற் கட்டளைகளின்படி, சபாநாயகர், பிரதி சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு நாடாளுமன்றம் ஆரம்ப நாளிலேயே நியமிக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிகழ்த்தவுள்ளார்.
நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21ஆம் தேதி இடம்பெறவுள்ள நிலையில் பிற்பகல் 3 மணிக்கு கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33(a) பிரிவின்கீழ், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் அரசாங்கத்தின் கொள்கை
பிரகடன உரை நிகழ்த்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு தேர்வான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இரண்டு மையங்களைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிதாக தேர்வான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் 03 நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி,25, 26, 27 ஆகிய திகதிகளில் செயலமர்வு நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (16.11) வெளியிடப்படவுள்ளது.
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments