Ticker

6/recent/ticker-posts

Ad Code



”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதாரத் துறையில் ரங்கநாதன் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சுகாதாரத்துறை மாணவர்களது வாட்ஸ் அப் குழுவில், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், சமஸ்கிரதத்தை படிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் திராவிடம் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கூறப்படுகிறது.

இது மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதனிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து பேராசிரியர் ரங்கநாதனை கட்டாய விடுப்பில் செல்ல பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பு அலுவலர் ராஜராஜன், ”துணைவேந்தர் தலைமையில் விசாரணை குழுவினர்பேராசிரியர் ரங்கநாதனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் விருப்ப ஓய்வில் செல்ல அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

kalaignarseithigal



 Ai SONGS

 



Post a Comment

0 Comments