Ticker

6/recent/ticker-posts

Ad Code

Richest City: உலகின் பணக்கார நகரம் எது தெரியுமா? சொத்து மதிப்பை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!


உலகின் பணக்கார நகரம் எது? மற்றும் அதன் மூலதனம் என்ன? என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

குளோபல் SWFஇன் சமீபத்திய அறிக்கை, உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி, அபுதாபி உலகின் பணக்கார நகரம் என்று தெரியவந்துள்ளது. அக்டோபர் 2024 நிலவரப்படி, UAE எமிரேட் 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ.142 லட்சம் கோடி) மதிப்புடன் முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்த பெரிய மூலதனமும் செல்வமும் அபுதாபியை மற்ற பணக்கார நகரங்களான ஓஸ்லோ, பெய்ஜிங், சிங்கப்பூர், ரியாத் உள்ளிட்டவற்றை முந்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ஆறு நகரங்களில் உள்ள செல்வத்தின் மொத்த மதிப்பு சுமார் 12.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1,000 லட்சம் கோடிக்கு மேல்) ஆகும். அபுதாபியின் ராயல் பிரைவேட் அலுவலகங்கள் நிர்வகிக்கும் 344 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.28 லட்சம் கோடி) இந்த 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் கணக்கிடப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அலுவலகம் அரச குடும்பத்தின் தனியார் முதலீடுகளை கையாளுகிறது. இந்த தனியார் சொத்துக்கள் அபுதாபியின் ஒட்டுமொத்த செல்வத்தையும் மேலும் அதிகரிக்கும்.

SWF என்றால் என்ன?

Sovereign Wealth Fund (SWF) என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் முதலீட்டு நிதி நிறுவனம் ஆகும். இது ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. இதன் லாபம் நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்க அல்லது எதிர்கால செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அரச குடும்பத்தினரின் சொத்துக்களை நிர்வகிக்கும் அலுவலகங்கள் ராயல் பிரைவேட் அலுவலகங்கள் (RPO) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, ​​அபுதாபியின் பொது மூலதனம் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2030ஆம் ஆண்டில் 3.4 டிரில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அபுதாபியின் SWF நிதிகள் பல முக்கிய முதலீட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில், அபுதாபி முதலீட்டு ஆணையம், அபுதாபி முதலீட்டு கவுன்சில், அபுதாபி டெவலப்மென்டல் ஹோல்டிங் கம்பெனி, Lunate, அபுதாபி ஃபண்ட் ஃபார் டெவலப்மெண்ட் (ADFD), Tawazun மற்றும் எமிரேட்ஸ் முதலீட்டு ஆணையம் போன்றவை அடங்கும். 2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும், அபுதாபியின் ADIA, Mubadala மற்றும் ADQ போன்ற நிறுவனங்கள் உலகளாவிய திட்டங்கள் மற்றும் வணிகங்களில் குறிப்பிடத்தக்க வகையில் 36 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளன.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments