Ticker

6/recent/ticker-posts

Ad Code



109 ரன்ஸ்.. 5க்கு 5.. ஒய்ட் வாஷ் வெற்றியால் இலங்கை கனவை உடைத்த தெ.ஆ.. இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி


தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் 233 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி டிசம்பர் 5ஆம் தேதி கிபர்ஹா மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை அடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா 358 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 101, கேப்டன் பவுமா 78, கெய்ல் வேர்ரின் 105* ரன்கள் எடுத்தார்கள். இலங்கைக்கு அதிகபட்சமாக லஹிரு குமாரா 4, பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய இலங்கை முடிந்தளவுக்கு போராடியும் 328 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக நிசாங்கா 89, தினேஷ் சண்டிமால் 44, ஏஞ்சலோ மேத்தியூஸ் 44, கமிண்டு மெண்டிஸ் 48 ரன்கள் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 30 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 317 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 66, ஐடன் மார்க்ரம் 55, ஸ்டப்ஸ் 47 ரன்கள் எடுத்தார்கள்.

இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 348 ரன்களை துரத்திய இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் போராடியும் 238 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் டீ சில்வா 50, குசால் மெண்டிஸ் 46 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனால் 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாபிரிக்கா 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை ஒய்ட்வாஷ் செய்து கொண்டுள்ளது. இதையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா 5 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 63.33% புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவை முந்திய தென்னாப்பிரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

அதன் காரணமாக 45.45% புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு சரிந்த இலங்கையின் ஃபைனல் வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா உடைத்துள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த தொடரில் ஒரு போட்டியில் வென்றால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெற 90% பிரகாச வாய்ப்புள்ளது. அதனால் 57.29% புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் இந்தியா ஃபைனலுக்குச் செல்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்த 3 போட்டிகளில் 3 வெற்றி அல்லது 2 வெற்றி, 1 ட்ராவை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இல்லையேல் ஆஸ்திரேலியா ஃபைனல் சென்று விடும்.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments