Ticker

6/recent/ticker-posts

Ad Code



நேற்று ஆதவ் அர்ஜுனா; இன்று மண்டலத் துணைச் செயலாளர்.. விசிகவில் தொடரும் அதிரடி


விசிக திருச்சி மண்டலத் துணைச் செயலாளராக வழக்கறிஞர் இராஜா என்கிற மன்னன் என்பவர் இருந்துவந்தார். இவர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவந்துள்ளன. இதன் காரணமாக இவர் தற்போது விசிகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இவரது நீக்கம் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கட்சியின் திருச்சி மண்டலத் துணை செயலாளர் வழக்குரைஞர் இராஜா என்கிற மன்னன் மீது மண்டலச் செயலாளர் தமிழாதன் புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சார்ந்த இவர், தொடர்ந்து கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தலைமையின் கவனத்துக்குத் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, இவர்மீதான பல்வேறு புகார்கள் தலைமையின் கவனத்துக்கு வந்தபோது, அவரைக் கண்டித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவாகியிருப்பது கட்சியின் மீதான நன்மதிப்புக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது. தொடர்ச்சியாக மக்கள் விரோத மற்றும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இராஜா என்கிற மன்னன் மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று விசிகவில் இருந்து அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து 6 மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று திருச்சி மண்டலத் துணைச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments