Ticker

6/recent/ticker-posts

Ad Code



“தமாசு... தமாசு..” : 2022ல் வடிவேலுவை மிஞ்சி காமெடி செய்த அண்ணாமலை - கலாய்த்து தள்ளிய பிரபல பத்திரிகை !


“முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியும்" - (இப்படி நாம் கூறவில்லை; திருப்பூரில் அவரது கட்சிக்காரர்களே சூட்டியபட்டமிது!) புதிதாக தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழக பா.ஜ.க.வுக்கு வந்ததிலிருந்து, அண்ணாமலை நடத்தி வரும் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, தமிழக அரசையும், கழகத்தையும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவரின் அரசியல் அரை வேக்காட்டுத் தனத்தால், பா.ஜ.கவினரை வெளியே தலைகாட்ட முடியாது நிலைக்கு தள்ளியிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றால்லாம் கதை விட்டு வந்த அண்ணாமலை கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என தெரியவந்ததையடுத்து பலரும் அண்ணாமலைக்கு இவ்வளவு மதிப்புள்ள வாட்ச் வாங்க பணம் எங்கிருந்து வந்தது, பில் எங்கே என பல்வேறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார் , 20000 புத்தகம் படித்துள்ளேன். 9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச் என கதையளந்த அண்ணாமலை தற்போது ரூ.345/- மெஷினை 10,000 ரூபாய் என பொய் சொல்லி அம்பலப்பட்டுள்ளார்.

குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் முக்கிய காரணமாக இருந்தது சமூகவலைத்தளங்கள்தான். அப்போது பாஜக பரப்பிய பொய்ச்செய்திகள் உண்மை என்றே மக்களால் நம்பப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக சொன்னது அனைத்தும் பொய் என்பது தற்போது அனைத்து தரப்பினரையும் எட்டியுள்ளது.

அதிலும் தமிழ்நாட்டில் பாஜக சொல்லும் பொய்களை எப்போதுமே மக்கள் நம்பியது இல்லை. ஆனாலும், பாஜக தலைவர்கள் பொய் சொல்வதை ஒருபோதும் நிறுத்தியதில்லை. அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் அண்ணாமலை பேசிய பொய்களை கீழே காண்போம்.

கட்சியில் சேர்ந்தவுடனே அண்ணாமலை வாய் தவறி அல்ல, தெரிந்தே உலறுகிறார். அதன்படி பத்திரிக்கையாளர் சந்திப்பில், முதலமைச்சரும், நாங்களும் கொள்கையில் 360 டிகிரி மாறுபட்டவர்கள். ஆனால் முதலமைச்சருக்கு உண்டான மரியாதையைக் கொடுப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, 360 டிகிரி எதிராக இருக்கிறோம் என்று பேசியுள்ளார் அண்ணாமலை. ஆனால், பாகைமானியில் 0 டிகிரி என்பதும், 360 டிகிரியும் ஒரே கோணத்தை குறிப்பவை என்பது பள்ளிக்கூட சிறுவர்களுக்கு கூட தெரியும். ஆனால், இந்த சாதாரண கணக்குக்கூட தெரியாத அண்ணாமலை எப்படி IPS தேர்வானார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேபோல் மற்றொரு பேட்டியில், சொந்த கட்சி பிரதமர் பெயரையே மறந்து பாராத பிரதமர் மகாத்மா காந்தி கதிர் ஆடை வாங்கச் சொல்லியிருக்கிறார் என்கிறார். அதுமட்டுமல்லாது வரலாற்று தகவலாவது தெரிகிறதா என்றால் அதுவும் இல்லை. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், ராஜராஜ சோழன் ஆமை கழுத்துல கயிறு கட்டிட்டு கடலில் பயணம் செய்தார் வந்ததாக புருடா விடுகிறார்.

இட ஒதுக்கீட்டு பற்றி தெரியாமல் விவாதத்தில் பங்கேறு பேசுகிறார். அக்டோபர் 3, 1967ம் ஆண்டு சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு வந்த சத்ரபதி சிவாஜி என்றுகிறார். ஆனால் 1680 ஏப்ரலில் இறந்துவிட்டார் என்பதே உண்மை. இப்படி பல பொய்கள் உளறல்களை அடுக்கிக்கொண்டே போலாம்.

இந்நிலையில் அண்ணாமலையை விமர்சித்து பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடர் சிரிப்புப் போலீஸுக்கு டைம் சரியில்லை என்ற தலைப்பில் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், “வடிவேலு இல்லாத குறையைப் போக்க வாராது வந்த மாமணிதான் அண்ணாமலை.

'கையும் களவுமாக' மாட்டிய ராகவன் பஞ்சாயத்தை விசாரிக்க ஒரு குழு, 'கெட்டபய சார் இந்தத் திருச்சி சூர்யா' பிராதை விசாரிக்க ஒரு குழு என்று வரிசையாய் அண்ணாமலை குழுக்கள் அமைக்க, 'முதல்ல நீங்க ஐ.பி.எஸ் எப்படி பாஸ் பண்ணீங்கன்னு விசாரிக்க ஒரு குழு போடணும்' என்றது தமிழகம்.

'வல்வில் ஓரி சுதந்திரப்போராட்ட வீரர், 360 டிகிரி கணக்கு தப்பு, விமான பாகத்தில் வாட்ச்' என்று பொது அறிவுப் பூஜ்ஜியமாக அண்ணாமலை உளறிக்கொட்டியது அனேகம். 'போராடப் போறேன்' எனக் கட்சிக்காரர்களைக் கூட்டிக்கொண்டு கோட்டை நோக்கிப் போக, போலிஸ் கைது செய்ய வருவது தெரிந்ததும்கூட வந்தவர்களை அம்போவென விட்டுவிட்டு ஆட்டோவில் ஏறிய மான் கராத்தே வீரர்.

'பெண்களைப் பற்றித் தப்பாய்ப் பேசினால் நாக்கை வெட்டுவேன்' என்று பாகுபலி மோடில் இருந்தவரைப் பழிதீர்க்க அடுத்த வாரமே வெளியானது திருச்சி சூர்யா - டெய்சி 'ஏச்சுக்குப் பேச்சு' ஆடியோ. பாகுபலி பிலிம் காட்டிய அண்ணாமலை பம்ம, ‘இவரு டம்மி பீசு' என்று தமிழகமே சிரித்தது.

குண்டுவெடித்த மறுநாளே என்.ஐ.ஏ-வுக்கு ஏன் மிஸ்டுகால் கொடுக்கலை என்று தமிழக அரசைப் பார்த்துக்கேட்ட அண்ணாமலை, 'வாட்ச் ரசீது நாலு மாசம் கழிச்சு தர்றேனே' என்று தலையைச் சொறிந்தது தமாசு... தமாசு!” எனத் தெரிவித்துள்ளது.

kalaignarseithigal


 Ai SONGS

 



Post a Comment

0 Comments