Ticker

6/recent/ticker-posts

Ad Code



மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார விடுதி : சிக்கிய பெண்கள்


மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் அங்கிருந்த மூன்று பெண்கள் மற்றும் முகாமையாளரை கைது செய்துள்ளனர்.

களுத்துறை(kalutara)  குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை வடக்கு பகுதியில் இயங்கிய விபசார விடுதியே முற்றுகையிடப்பட்டுள்ளது.

நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவு

களுத்துறை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் புத்தல, புளத்சிங்கள மற்றும் அக்குரஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், முகாமையாளர் மொரட்டுவையைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 4,000 ரூபாய் பெறுமதியான சேவைகளை வழங்கியுள்ளதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்துள்ளதாகவும் காவல்தறையினர் மேலும் தெரிவித்தனர்.

ibctamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments