இஸ்ரேலுக்கும் (israel)இலங்கைக்கும்(sri lanka) இடையிலான ஒப்பந்தத்தின்படி 13.04.2024 முதல் 30.11.2024 வரை இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வேலைக்காக 4531 பேர் சென்றுள்ளனர். இவ்வாறு இஸ்ரேலுக்கு சென்றவர்கள் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறுவப்பட்ட இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் பணிபுரிந்தவர்களாவர்.
இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை இஸ்ரேலிய வேலைகளுக்காக 1802 பேர் செல்ல உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறுகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை
இதேவேளை இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் வேலை தேடுபவர்கள் குலுக்கல் முறையின் கீழ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மோசடியாக பணம் பெறும் நபர்கள் மற்றும் குழுக்களை பணியகம் கண்டறிந்துள்ளது.
இலஞ்ச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது
அதனடிப்படையில், மோசடியாக பணம் பெறுவது அல்லது கொடுப்பது இலஞ்ச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது எனவும், இவ்வாறான மோசடிச் செயல்களில் சிக்காமல் இருக்குமாறும், சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லுமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு மோசடியான முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் இருப்பின் அவ்வாறானவர்கள் பற்றிய தகவல்களை பணியகத்தின் 1989 தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments