Ticker

6/recent/ticker-posts

Ad Code



40 வயதுக்கு மேல் அசைவம் தவிர்க்க வேண்டுமா? மருத்துவர் சிவராமன் பதில்


வயதானவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது என்ற ஒரு கருத்து பரவலாக உள்ளது. அதன் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கமளித்துள்ளார்.

அசைவ உணவுகள் சாப்பிடுவதை 40 வயதுக்கு மேல் குறைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அது முற்றிலும் உண்மை இல்லை என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மீன் உணவுகள் எளிதாக செரிமானம் ஆகக் கூடிய தன்மை கொண்டது என சிவராமன் கூறுகிறார். இவை எந்த வயது இருப்பவர்கள் சாப்பிட்டாலும் சுலபமாக செரிமானம் ஆகிவிடும் என்று அவர் வலியுறுத்துகிறார். செரிமானத்திற்கு நேரம் எடுத்துக் கொள்ளக் கூடிய புரதங்கள் மற்றும் கொழுப்பு ஆகியவை மீனில் இல்லை என்பதால் இதனை எல்லோரும் சாப்பிடலாம் என்று சிவராமன் குறிப்பிடுகிறார். வயதான காலத்திலும் வேக வைத்த மீன்களை சாப்பிடலாம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

அதன்படி, வயதானவர்கள் அசைவம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுப்படையாக கூறுவதை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர் சிவராமன் திட்டவட்டமாக கூறுகிறார். 

எனினும், அதிகப்படியாக எண்ணெய்யில் பொறித்து எடுத்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடலாம் என்று குறிப்பிடுகிறார். இதேபோல், மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போன்றவற்றை குறைவாக சாப்பிடலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.

வயதான பின்பு உடல் உழைப்பு குறைந்து விடுவதால் இது போன்ற, உணவுகளை குறைத்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

indianexpress




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments