
உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலக மக்கள் தொகையில் சுமார் 2.5 பில்லியன் மக்கள் அடுத்த 25 ஆண்டுகளில் காது கேளாமை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது 160 கோடிக்கும் அதிகமான மக்கள் ஓரளவு அல்லது மிதமான அளவிலான காது கேளாமை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் சுமார் 4.3 கோடிக்கும் அதிகமானோருக்கு தீவிர மறுவாழ்வு அல்லது சிகிச்சை தேவைப்படுவதாக அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் 250 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காது கேளாமை பிரச்சினைக்கு வயது முதிர்ச்சி ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், நீண்ட நேரம் இசையை உரத்த சத்தத்தில் கேட்பது, போக்குவரத்து நெரிசல் மற்றும் நகர்ப்புற இரைச்சல் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் இளைஞர்களிடையே காது கேளாமை பாதிப்பை கணிசமான அளவில் அதிகரிக்கின்றன. விஞ்ஞான ரீதியாக, இந்த நிலை Presbycusis என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நிபுணர்கள் இந்த பாதிப்பை பொறுத்தவரை சரியான நேரத்தில் தடுக்க முடியும் அதாவது ஆரம்பநிலை தடுப்பு சாத்தியம் என்று நம்புகிறார்கள்.
ஆபத்தாக மாறி வரும் உரத்த ஒலிகள் மற்றும் இரைச்சல்:
போக்குவரத்து, கட்டுமான பணிகள் மற்றும் அதிக ஒலி கொண்ட ஹெட்ஃபோன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஒலி மாசுபாடு போன்றவை நம் காதுகளை அமைதியாக சேதப்படுத்துகிறது. பாதுகாப்பற்ற ஒலி அளவுகளை தினமும் கேட்பதால் 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் நிரந்தர காது கேளாமை பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளதாக WHO எச்சரிக்கிறது. இதன் காரணமாக காது கேளாமை பிரச்சினை இனி வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் ஒரேடியாக இல்லாமல் மெல்ல மெல்ல கேட்கும் திறன் குறைவது கவனிக்கப்படாமல் போய்விடும்.
மற்றவர்கள் தங்களிடம் பேசும் போது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்க முடியாமல் அடிக்கடி திரும்பத் திரும்பச் சொல்லும்படி ஒருவர் கேட்கத் தொடங்கலாம் அல்லது சத்தம் அதிகம் இருக்கும் சூழலில் தெளிவாக கேட்க சிரமப்படலாம். ஆனால் இது பெரும்பாலும் வயதானதன் காரணமாக ஏற்படும் இயல்பான ஒரு பாதிப்பு என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. எனவே இது சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து கொள்ளும் வாய்ப்பை தாமதப்படுத்துகிறது. எனவே வயதை பொருட்படுத்தாமல் எந்த வயதில் கேட்கும் திறன் குறைந்தாலும் அதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு உடனடியாக சரி செய்ய முன்னுரிமை அளிக்க நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
60% பாதிப்புகள் தடுக்க கூடியவை..
போதுமான விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மூலம் குறைந்தது 60 சதவீத பதிப்புகளில் தீவிர அல்லது நிரந்தர காது கேளாமை ஏற்படுவதை தடுக்க முடியும் என்று WHO நம்புகிறது. பாதுகாப்பான ஒலியளவை கேட்கும் பழக்கம், சரியான நேரத்தில் போட்டுக்கொள்ளும் தடுப்பூசிகள், காதுக்கு சேதம் விளைவிக்கும் (ஓட்டோடாக்ஸிக்) மருந்துகளைத் தவிர்ப்பது, காது தொற்றுகளுக்கு சிகிச்சை பெறுவது மற்றும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு வழங்குதல் போன்றவை இதில் அடங்கும்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் காது பரிசோதனைகளை செய்து கொள்ள WHO பரிந்துரைக்கிறது. வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும், காது கேளாமை வளர்ச்சியடைய கூடும். ஆரம்பகட்டத்திலேயே பாதிப்பை கண்டறிதல் மற்றும் உடனடி சிகிச்சை நிரந்தர பாதிப்பு ஏற்படுவதை தடுக்க உதவும்.
குழந்தைப் பருவத்திலேயே...
காது பாதுகாப்பு சார்ந்த விஷயங்களை குழந்தைப் பருவத்திலேயே தொடங்க சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். காது தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.
காது தொடர்பான பிரச்சனைகள்
குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் சத்தத்தை குறைவாக வைத்து இசையைக் கேட்கவும், ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் வேண்டும். பொதுவான காது நோய்களை அலட்சியம் செய்யாமல் உடனடி சிகிச்சை பெற வேண்டும். கேட்கும் திறனை பாதுகாக்க வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எச்சரிக்கை தேவை. WHO-வின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 60% காது கேளாமை பாதிப்புகளை சரியான நேரத்தில் கண்டறிந்தால் அந்த நிலையை நிர்வகித்து பாதிப்பை தடுக்கலாம்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments