
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (24) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற இங்கிலாந்து அணி சமன் செய்துள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக சரித் அசலங்க 45 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வெற்றிக்காக 220 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 46.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை உறுதி செய்தது. இங்கிலாந்து அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 75 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
itnnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments