Ticker

6/recent/ticker-posts

சோசியல் மீடியாவுக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினர்.. மெட்டா, யூடியூப் நிறுவனங்களிடம் விசாரணை..!


அமெரிக்காவில் இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி இருப்பது தொடர்பான வழக்கில் மெட்டா, யூடியூப் நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சர்வதேச அளவில் வயது வித்தியாசமின்றி சமூக வலைதள பயன்பாட்டிற்கு அடிமையாக வருகின்றனர். இந்நிலையில், கலிபோர்னியாவை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் இது தொடர்பாக கலிபோர்னியா நீதிமன்றத்தை நாடினார்.  சமூகவலைதளங்களின் கவர வைக்கும் வடிவமைப்பால் அவற்றுக்கு தாம் அடிமையாகிவிட்டதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவற்றை அதிகமாக பயன்படுத்தியதால் மன அழுத்தத்திற்கு ஆளானதோடு, தற்கொலை செய்துக்கொள்ள தூண்டும் அளவுக்கு பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த மனு தொடர்பாக விரைவில் சமூக வலைதள நிறுவனங்களிடம் நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

அதன்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டாவின் சிஇஓ மார்க் ஜுக்கர்பர்க் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தெரிகிறது. மனுதாரரின் மனரீதியான பிரச்சனைகளுக்கு தங்கள் நிறுவனத்தின் செயலிகள் காரணமல்ல என அவர் வாதிட உள்ளதாக தெரிகிறது. இதேபோல் டிக்டாக்,, யூடியூப் நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

news18

 


Post a Comment

0 Comments