Ticker

6/recent/ticker-posts

கண்ணீரில் பிறந்த சிரிப்பு!


ரவி ஏழை.அது அவனுடைய அடையாளம் அல்ல…ஆனால் உலகம் அவனுக்கு கொடுத்த முத்திரை.

காலையில் தேநீர் கடை,மாலையில் சிறிய பத்திரிகை வேலை,இரவில் கனவுகள்.

அவனிடம் பணம் இல்லை,ஆனால் இதயம் நிறைய இருந்தது.

அவனுடைய நோக்கமெல்லாம் நல்லதொரு நிலைக்கு வரவேண்டும் ,சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே.இரவு பகல் பாராது உழைத்தான்.வாழ்கையில் முன்னேறவேண்டும் என்ற வெறி அவனுள் வேரூன்றி இருந்தது.

ராதா…
செல்வத்தில் பிறந்தவள்.அவளுடைய வீடு பெரியது,ஆனால் அவள் மனம் தனிமையில் சுருங்கியிருந்தது.

அன்று மழை பெய்துக் கொண்டிருந்தது.ரவி குடை இல்லாமல் நின்றான்.ராதா காரிலிருந்து இறங்கி ஒரு கணம் அவனை பார்த்தாள்.

மழைத்துளிகளோடு சேர்ந்து இருவருடைய கண்களும் சந்தித்துக்கொண்டன.

அந்த பார்வைதான் காதலின் முதல் மழைத்துளி.

காதல் வளர்ந்தது…மெளனமாக,அழகாக,ஆனால் சமூகம் அதை பொறுத்துக் கொள்ளவில்லை.

“ஏழையா?”
“அவனுக்கு என்ன தகுதி?”என்று ராதாவின் குடும்பம் கேட்டது.

ரவி ஒரு நாள் கூட கோபப்பட்டதில்லை.

ஆனால் ஏழை என்ற அந்த அடையாளத்தை துடைத்தெறிய வேண்டும் என்ற 
வெறி அவனுள் மிகவும் ஆழமாக வேரூன்றியது.

நாம் உயிருக்கு உயிராக காதலித்தாலும்,பணம் என்று வரும்போது அதன் தாக்கம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவன் அறியாமல் இல்லை. 

அவன் சொன்னான்:
“நான் உன்னை விட்டு போகிறேன்…உன் கண்ணீரை என் காதல் தாங்காது.”

"ரவி,,என்ன சொல்றே?"

"ஆமாம் ராதா..நான் முதலில் பணத்தை தேடவேண்டும்...எங்களைப்போன்ற ஏழைகளுக்கு காதலெல்லாம் சரிப்படாது.உயிரோடு இருந்தா பணத்தோடு வருவேன்.நீ எனக்காக காத்திருந்தால் உன்னோடு வாழ்வேன் .."கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க இடத்தைவிட்டு நகர்ந்தான் ரவி.

அந்த நாள் ராதா உடைந்தாள்.ரவி  நகரை விட்டுச் சென்றான்.
காதல் தூரத்தில் அழுதது.
 
ஆண்டுகள் சென்றன.ராதா பணத்தில் மூழ்கினாள்,ஆனால் மகிழ்ச்சி இல்லை.

ரவி உழைத்தான்.தோல்விகள், அவமானங்கள்,ஆனால் கனவை விடவில்லை.

ஒரு நாள்
ராதா ஒரு மருத்துவமனையில் தனியாக நின்றாள்…
கையில் ஒரு ரிப்போர்ட்.அவள் கர்ப்பமாக இருந்தாள்.அந்த குழந்தை
ரவியின்  காதலின் சின்னம்.

ரவி ஒரு சமூக அமைப்பில் வேலை செய்துகொண்டிருந்தான்.ஏழை குழந்தைகளுக்காக.

அங்கே ராதா வந்தாள்…கண்ணீருடன்.

“ரவி …நான் உன்னைத் தேடாத இடமில்லை.நீ இங்கு இருப்பதாக கேள்விப்பட்டேன் ”
ராதாவின் கண்கள் கலங்கியிருந்தன.

ரவி அவள் வயிற்றை பார்த்தான்.

அவன் கண்களில் கண்ணீர் இல்லை…பொறுப்பு இருந்தது.

“இந்த குழந்தை என் உயிர்,”என்றான் மெல்லிய புன்னகையோடு...

ராதாவின் முகம் மலர்ந்தது.

ரவியின் உறுதியான காதலை நினைத்து பெருமைப்பட்டாள்.அவளை எந்தவிதத்திலும் சந்தேகப்படாமல்,அவன் சொன்ன வாத்தைகள் ராதாவை மெய்சிலிர்க்க வைத்தது.

ரவியைவிட ஒரு சிறந்த கணவன் கிடைப்பானா?.என்று பெருமைப்பட்டாள்.

அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தாள்.
அவள் முதல் அழுகை இரண்டு உடைந்த இதயங்களை ஒன்றாக்கியது.

அவளுக்கு பெயர் வைத்தார்கள்.கீர்த்தனா.

கீர்த்தனா என்றால் ஒளி.

அந்தச் சிறிய குடும்பத்தில் ஒளி பிறந்தது.

ராதா செல்வத்தை விட்டு வந்தாள்.ரவி பெருமையை விட்டு அன்பை எடுத்தான்.

இன்று அவர்கள் வீடு சிறியது.ஆனால் சிரிப்பு பெரியது.

ரவி  எழுதுகிறான்.ராதா கற்பிக்கிறாள்.கீர்த்தனா அவர்களின் நடுவில்
காதலாக வளர்கிறாள்.

ஏழையும் பணக்காரனும் இங்கு இல்லை.இங்கு மனிதமும்,காதலும்,
குடும்பமும் தான்.

குழந்தையின் சிரிப்பில் புது உலகத்தைக் கண்டார்கள்

மாஸ்டர் 


 


Post a Comment

0 Comments