
சற்றுத்தூரம் ஓடியவ இர்வின், மெல்லத் திரும்பிப் பார்த்தான்! வானரங்களை அங்கு காணவில்லை! பக்கத்திலிருந்த கல்லொன்றின் மேல் ஏறியவன், மரக்கிளையை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, கல்மேல் உட்கார்ந்தபடி சிறிது நேரம் இளைப்பார லானான்.
பின்னர், தனது இடையைச் சுற்றியிருந்த தோல்பட்டியில் தொங்கிக்கொண்டிருந்த பையைத்திறந்து, தண்ணீர்க் குவளையை எடுத்து, நீர் அருந்திவிட்டு, எழுந்து நின்ற அவன் சுற்றுமுற்றும் பார்த்தபோதுதான், வெகுதூரத்தில் வலைந்து நெளிந்து அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றைக் கண்டான்! அதுதான் “ஓரினகோ” வாக இருக்கவேண்டும் என்பதைத் தனக்குள் உறுதிப்படுத்திக் கொண்டவனாகக் கல்லிலிருந்தும் கீழிறங்கி, தான் சுமந்து வந்த மரக்கிளையின் இலைகளை நீக்கிவிட்டு, அதனை ஊன்றுகோலாக்கி நிலத்தில் ஊன்றியபடி ஆற்றின் திசை நோக்கி நடக்கலானான்!
சிறிதுதுரம் நடந்து கொண்டிருக்கும்போது, பிறந்த மேனியாகச் சில மனிதர்களும், பட்டைகளையும் இலைகளையும் இடையில் சொறுவிக்கொண்டவர்களாக வேறு சிலரும் வனத்தினுள் நடமாடிக்கொண்டிருப்பதைக் கண்டான்!
நேருக்கு நேர் சந்தித்தபோதிலும் அவர்கள் எவருமே ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாதது அவனுக்குப் பெரும் புதிராகவிருந்தது!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments