
வெஃகாமை
குறள் மொழி 40
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.
குறள் எண் : 171
குறள் மொழியின் பொருள் :
ஒருவன் நடுவு நிலைமை இல்லாமால் பிறருடைய பொருளை அபகரிக்க நினைத்தால், ஆசைப்பட்டால் அந்த எண்ணமானது அவனது குடியைக் கெடுத்துப் பல தீமைகளை அளித்துவிடும். அது பெரும் பாவமாகும்.
நபிமொழி :
“எவரேனும் பிறர் பொருளுக்கோ, நிலத்திற்கோ ஆசைப்பட்டு, அவருக்குச் சொந்தமான ஒரு சாண் அளவு நிலமாயினும், அபகரிப்பானாயின் அவனுடைய கழுத்தில் அல்லாவற் மறுமை நாளில் ஏழு அடுக்கு பூமியை வளையமிடுவான்” என்று நபி (ஸல்) பெருமானார் கூறினார்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள் மூலமாக - அறிந்து அபூ ஸல்மா இப்னு அப்திர்ரஹ்மான் ஆதாரம் : புகாரி, முஸ்லிம் - 77.
தீவினையச்சம்
குறள் மொழி 41
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
குறள் எண் : 208
குறள் மொழியின் பொருள் :
பிறருக்குத் தீமை செய்தவனுக்கு ஏற்படப்போகும் கெடுதல் என்பது, அவனுடைய நிழலானது எப்போதும் அவனை விடாது பின் தொடர்வது போன்று துன்பம் தொடர்ந்து வரும்.
நபிமொழி:
கெட்ட சூழ்ச்சிகள் மூலம் ஏற்படப்போகும் கெடுதல் ஆனது, அதைச் செய்தோரையே சூழ்ந்து கொள்ளும். அதிலிருந்து தப்ப இயலாது.
(ஆதாரம் இறைவசனம்: திருக் குர்ஆன் 35:43)
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments