
மாமன் மகளே என்று உன் வரவு.
மாலையிலே நான் தேடும் நிலவு.
மாதங்கள் கத்திருந்து கரையுது இரவு.
மாசில்லா மனமோ பெரும் நோவு.
மாவிளக்கு ஏற்றையிலே நோக்கினேன்.
மாதவியே அன்றே காதலில் தேங்கினேன்.
மாப்பிளைக் கோலமிட ஏங்கினேன்.
மார்பிலே உனைத் தாங்கிட எண்ணினேன்.
மாக்கோலமிடும் விரலுக்கு
கடையாணி வாங்கினேன்.
மார்கழிப் பூவே கரங்களிலே
உனைத் தாங்குவேன்.
மாஞ்சோலை வண்டாய்
எப்போதும் சுற்றிடுவேன்.
மாங்கனிக் கன்னம்
தினம் கொடுப்பாயோ .
மாட்டேன் என்று என்னை
வெறுப்பாயோ மான்போல்
துள்ளியோடி மறைவாயோ.
மாளிகை மகராணியாய்
வாழவே நினைப்பாயோ.
இல்லை இல்லை
என்னையே அழைப்பாயோ.
இணையவே துடிப்பாயோ
இன்பம் கொடுப்பாயோ
இருப்புக் கொள்ள
இயலவில்லையடி
இளையவன் நெஞ்சம் இன்னும்.
குழப்பத்தின் எல்லையிலடி.
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments